வரும் 2024ல் இந்தியாவில் ஒலிம்பிக் போட்டியை நடத்த ஏற்பாடுகள் நடக்கின்றன. எல்லாம் சரியாக அமையும் பட்சத்தில் ஆமதாபாத்தில் போட்டி நடக்கும் எனத் தெரிகிறது.
கடந்த 1896ல் கிரீஸ் நாட்டின் ஏதென்சில் முதல் நவீன ஒலிம்பிக் போட்டி நடந்தது. தொடர்ந்து ஒவ்வொரு நான்கு ஆண்டுக்கு ஒருமுறை நடக்கும் இப்போட்டி கடைசியாக 2012ல் லண்டனில் நடந்தது.
அடுத்து 31வது ஒலிம்பிக் போட்டி வரும் 2016ல் பிரேசிலின் ரியோ டி ஜெனிரோ நகரில் நடக்கவுள்ளது. 2020 போட்டியை நடத்த ஜப்பான் (டோக்கியோ) அனுமதி பெற்றுள்ளது.
இதுவரை, ஆசிய கண்ட நாடுகளை பொறுத்தவரை ஜப்பான், தென் கொரியா, சீனா நாடுகள் ஒலிம்பிக் போட்டியை நடத்தின. ஆனால், ஒரு முறை கூட இந்தியாவில் நடந்தது கிடையாது.
திடீர் போட்டி: இதனிடையே, 2024ல் ஒலிம்பிக் நடத்த இத்தாலி (ரோம்), ஜெர்மனி (ஹம்பர்க்), அமெரிக்கா (பாஸ்டன்), கத்தார் (தோகா) உள்ளிட்ட பல நாடுகள் விருப்பம் தெரிவித்துள்ளன. தற்போது திடீரென இந்தியாவும் இதற்கான போட்டியில் குதித்துள்ளது. குறுகிய கால அவகாசம் மட்டும் உள்ளதால், அனுமதியை பெற இந்தியா தரப்பில் தீவிரமாக இறங்கியுள்ளனர்.
எப்போது நடந்தது: இதுகுறித்து மத்திய விளையாட்டுத்துறை செயலர் அஜித் மோகன் ஷரண், சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி (ஐ.ஓ.சி.,) அதிகாரிகளிடம் கடந்த வாரம் சுவிட்சர்லாந்தின் லாசன்னேயில் பேசியதாக தெரிகிறது. அப்போது, ஐ.ஓ.சி., தலைவர் தாமஸ் பாக்கினை இம்மாதம் இந்தியா வருமாறு வேண்டுகோள் விடுத்தார்.
மோடியுடன் சந்திப்பு: இதை ஏற்ற தாமஸ் பாக், அடுத்த மாத இறுதியில் அதிகாரபூர்வ பயணமாக இந்தியா வருகிறார். இங்கு பிரதமர் மோடியை சந்தித்து பேசுகிறார். இதற்கான தேதி இன்னும் முடிவாகவில்லை.
இருப்பினும், இருவர் இடையிலான சந்திப்பில், 2024 ஒலிம்பிக் போட்டியை நடத்துவது குறித்து தான் அதிகம் பேசப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேநேரம், மத்திய விளையாட்டு அமைச்சர் சர்பானாந்தா சோனாவல் இதுகுறித்து எதுவும் தெரிவிக்க மறுத்து விட்டார்.
எந்த இடம்: தேசிய ஒலிம்பிக் கமிட்டி சார்பில், போட்டி நடத்தும் இடத்தை தேர்வு செய்து, வரும் செப்., 15க்குள், ஐ.ஓ.சி.,க்கு அனுப்ப வேண்டும். எல்லாம் சரியாக அமையும் பட்சத்தில் குஜராத்தின் ஆமதாபாத்தில் ஒலிம்பிக் போட்டி நடக்கலாம். இதுகுறித்து பல்வேறு கட்ட கூட்டத்திற்குப் பின், 2017ல் பெருவின் லிமா நகரில் நடக்கும் ஐ.ஓ.சி.,யின் 130வது கூட்டத்தில், ஒலிம்பிக் நடத்தும் இடம் அறிவிக்கப்படும்.