பிளஸ் 2 தேர்வில் எதிர்பார்த்த மதிப்பெண் கிடைக்காத மாணவர்கள்...

பிளஸ் 2 தேர்வில் எதிர்பார்த்த மதிப்பெண் கிடைக்காத மாணவர்கள் துறைசார்ந்த படிப்புகளை தேர்வுசெய்து சாதிக்கலாம்" என கல்வியாளர் ரமேஷ்பிரபா தெரிவித்தார்.

மதுரையில் தினமலர் சார்பில் நடந்த வழிகாட்டி நிகழ்ச்சியில் 60 சதவீதம் முதல் 80 சதவீதம் வரை மதிப்பெண்
பெற்ற மாணவர்கள் எதிர்காலம் குறித்து அவர் பேசியதாவது: மருத்துவம், பொறியியல் படிப்புகளை தவிர நம்மை சுற்றி 100க்கும் மேற்பட்ட படிப்புகள் உள்ளன. அவற்றை முதலில் தெரிந்துகொள்ள வேண்டும்.

பெற்றோர் - மாணவர்கள் சேர்ந்து ஆலோசித்து தன்னால் முடியும் என நினைக்கும் படிப்புகளை மாணவர்கள் தேர்வு செய்யுங்கள். நீங்கள் தேர்வு செய்வது பட்டம் சார்ந்து அல்லாமல் துறைசார்ந்த படிப்பாக இருந்தால் எதிர்காலம் சிறக்கும். மருத்துவம் கிடைக்கவில்லை என்றால் அதுசார்ந்த ஓமியோபதி, சித்தா, யுனானி, ஆயுர்வேதா, பி.பார்ம்., கால்நடை மருத்துவம் படிப்புகள் உள்ளன.

மேலும், மீன்வளம், வேளாண்மை, சட்டம் போன்ற படிப்புகளை தேர்வு செய்யலாம். திரைப்படம் சார்ந்த தொழில்நுட்பம் சார்ந்த படிப்பிற்கும் முக்கியத்துவம் அளிக்கலாம். கலை மற்றும் அறிவியல் பிரிவில் பி.காம்., சி.ஏ., உளவியல் படிப்புகள் உள்ளன. ஓர் ஆண்டில் ரூ.50 ஆயிரம் கோடி செலவிடப்படும் விளம்பரத் துறை மற்றும் ஊடகத்துறை படிப்புகளையும் தேர்வு செய்யலாம்.

படிப்பை தேர்வு செய்வதில் பெற்றோர் விருப்பத்தை மாணவர்களிடம் திணிக்கக் கூடாது. அவர்களின் ஆலோசனையை மாணவர்களும் புறக்கணிக்க கூடாது. சிறப்பான உள்கட்டமைப்பு உள்ள கல்லூரிகளில் உள்ள படிப்புகளை தேர்வுசெய்ய முன்னுரிமை அளிக்க வேண்டும், என்றார்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...