+2 முடித்தவர்களுக்கு “சிறந்த மேற்படிப்பை தேர்ந்தெடுக்க இலவச ஆலோசனை - பெற்றோரே...!

புளூம்ஸ் திறன் மேம்பாடு மற்றும் வேலை வழிகாட்டி நிறுவனம் சென்னை அண்ணா நகரில் இயங்கி வருகிறது.
இந்நிறுவனம் கிராக்கிங் ஐஏஎஸ் நிறுவனத்துடன் இணைந்து பிளஸ் டூ முடித்த மாணவ, மாணவிகளுக்கு “சிறந்த மேற்படிப்பை தேர்ந்தெடுக்க கலந்தாய்வு மற்றும் தனிநபர் ஆலோசனை”யை வழங்கவுள்ளது.
இம்மாதம் 12 மற்றும் 15 ஆகிய தேதி களில் நடைபெறும் இக்கலந்தாய்வில் மாநகராட்சி (சென்னை பள்ளி) மற்றும் அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவசமாக ஆலோசனைகள் வழங்கப்படும்.
பல்துறை நிபுணர்கள் பங்கேற்கும் இந்நிகழ்வில் தங்களுக்கு விருப்பமான பட்டப் படிப்பை எவ்வாறு தேர்ந்தெடுப்பது, கட் ஆஃப் மார்க்கை பொறுத்து எந்த பொறியியல், மருத்துவம் மற்றும் மேலாண்மை கல்லூரியில் வாய்ப்பு கிடைக்கும், தமிழகத்தின் சிறந்த பொறியியல், மருத்துவ, கலைக் கல்லூரிகள் எவை, தேர்ந்தெடுக்கும் பாடப் பிரிவின் இன்றைய வளர்ச்சி, வேலைவாய்ப்பு ஆகியவை குறித்து விளக்கப்படும்.
மேலும் அனைத்து கல்லூரிகளுக்கும் விண்ணப்பங்களை பூர்த்தி செய்யும் முறை, கடைசி தேதி பற்றிய விவரங்கள் இவை எல்லாவற்றை பற்றியும் தனித்தனியாக ஆலோசனை வழங்கப்படும்.
முன்பதிவு மற்றும் தகவல்களுக்கு 
9444486196, 9843770277 ஆகிய எண்களில் தொடர்புகொள்ளலாம்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...