ஆசிரியர் சகட்டு மேனிக்கு அடித்ததால் 40 மாணவர்கள் காயம் !!!

பெண் ஆசிரியர் சகட்டு மேனிக்கு அடித்ததால். மாணவ, மாணவியர், 40 பேர் காயம் அடைந்தனர்.
வேலூர் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த, புதூரில் அரசு நிதி உதவி பெறும், மேல்நிலைப் பள்ளி ஒன்றில், பள்ளி சீருடை அணிந்து வராமல், கலர் உடையோடு வந்த மாணவ, மாணவிகளை பள்ளி உடற்கல்வி ஆசிரியை சசிகலா கையில் இருந்த பிரம்பால் அடித்தார்.
இதில் 40 மாணவ, மாணவிகள் காயமடைந்தனர். இதையடுத்து ஆசிரியை மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, மருத்துவமனை முன், பெற்றோர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...