தமிழகத்தில் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்புகளுக்கான விண்ணப்பங்கள் மே 11-ஆம் தேதி முதல் விநியோகிக்கப்படும். மொத்தம் 40 ஆயிரம் விண்ணப்பங்கள் அச்சடித்து தயாராக வைக்கப்பட்டுள்ளன என மருத்துவக் கல்வி இயக்குநர் டாக்டர் எஸ்.கீதாலட்சுமி கூறினார்.
எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்புகளில் சேர வழக்கம்போல் ஒரே விண்ணப்பத்தை நிறைவு செய்தால் போதுமானது.
இதுதொடர்பாக டாக்டர் எஸ்.கீதாலட்சுமி, மருத்துவக் கல்வி தேர்வுக்குழு செயலர் டாக்டர் சுகுமார் ஆகியோர் சென்னையில் செய்தியாளர்களிடம் வெள்ளிக்கிழமை கூறியதாவது:
தமிழகத்தில் 2015-16-ஆம் ஆண்டுக்கான எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்புகளில் சேருவதற்கான விண்ணப்பங்கள் விநியோகம் மே 11-ஆம் தேதி முதல் தொடங்கும்.
விண்ணப்பிக்க மே 29 கடைசி: மே 28-ஆம் தேதி வரை விண்ணப்பங்கள் விநியோகிக்கப்படும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள், மே 29-ஆம் தேதி மாலை 5 மணிக்குள் மருத்துவக் கல்லூரி இயக்ககத்துக்கு வந்து சேர வேண்டும்.
ஜூன் 12-இல் தரவரிசைப் பட்டியல்: பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களைப் பரிசீலித்து, ஜூன் 12-ஆம் தேதி தகுதிப் பட்டியலை (ஙங்ழ்ண்ற் ப்ண்ள்ற்) வெளியிட இப்போதைக்கு திட்டமிடப்பட்டுள்ளது.
ஏனெனில் பிளஸ் 2 மாணவர்களுக்கான திருத்தப்பட்ட மதிப்பெண் சி.டி.-யை தேர்வுத் துறை அளிப்பதைப் பொருத்து தரவரிசைப் பட்டியல் வெளியாகும்.
விண்ணப்ப கட்டணம் ரூ.500: எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். விண்ணப்பங்களுக்கான கட்டணம் ரூ. 500 ஆகும். தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மாணவர்களுக்கு கட்டணம் கிடையாது.
40 ஆயிரம் விண்ணப்பங்கள்: கடந்த ஆண்டைப் போன்றே 40 ஆயிரம் விண்ணப்பங்கள் அச்சடித்து தயாராக வைக்கப்பட்டுள்ளன. கூடுதலாக விண்ணப்பங்கள் தேவைப்படும் நிலையில், மீண்டும் அச்சடித்து விநியோகிக்கப்படும்.
தமிழகத்தில் 19 அரசு மருத்துவக் கல்லூரிகளில் மொத்தம் 2,555 எம்.பி.பி.எஸ். இடங்கள் உள்ளன; இதில் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு 383 இடங்கள் போக, தமிழக ஒதுக்கீட்டுக்கு உரிய எம்.பி.பி.எஸ். இடங்கள் 2,172. சென்னை பாரிமுனையில் உள்ள அரசு பல் மருத்துவக் கல்லூரியில் 85 பி.டி.எஸ். இடங்கள் உள்ளன.
இணையதளத்தில்...:
தமிழக சுகாதாரத் துறையின் www. tnhealth. org இணையதளத்தில் எம்.பி.பி.எஸ். படிப்பில் சேர விண்ணப்பிக்கும், விளையாட்டு-மாற்றுத் திறனாளிகள்-முன்னாள் ராணுவ வீரர் வாரிசுகள் உள்ளிட்ட சிறப்புப் பிரிவைச் சேர்ந்த மாணவர்கள், முதல் தலைமுறை மாணவர்கள், தாழ்த்தப்பட்ட-பழங்குடி வகுப்பைச் சேர்ந்த மாணவர்களுக்கு உதவும் படிவங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
ஓமந்தூரார் அரசு மருத்துவக் கல்லூரி: சென்னை வாலாஜா சாலையில் அரசு பல்நோக்கு மருத்துவமனை வளாகத்தில் கட்டப்பட்டுள்ள ஓமந்தூரார் அரசு மருத்துவக் கல்லூரியை இந்திய மருத்துவக் கவுன்சில் (எம்.சி.ஐ.) அதிகாரிகள் ஆய்வு செய்து முடித்துள்ளனர்.
இந்தக் கல்லூரிக்கு நிகழ் கல்வி ஆண்டிலேயே (2015-16) எம்.சி.ஐ. ஒப்புதல் அளிக்கும் நிலையில், தமிழக ஒதுக்கீட்டுக்கு கூடுதலாக 85 எம்.பி.பி.எஸ். இடங்கள் கிடைக்க வாய்ப்பு உள்ளது என்றும் அவர்கள் தெரிவித்தனர்.