வாக்காளர் பட்டியலுடன் ஆதார் இணைப்பு: தமிழகத்தில் 50 சதவீதம் பேரின் விவரங்கள் சேகரிப்பு

ஆதார் விவரங்களை வாக்காளர் பட்டியலுடன் இணைக்கும் பணியின் ஒரு கட்டமாக, வாக்காளர் விவரங்களைச் சேகரிக்கும் பணிகள் 50 சதவீதம் முடிக்கப்பட்டுள்ளதாக தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சந்தீப் சக்சேனா தெரிவித்தார்.


   மொத்தம் 2.4 கோடி வாக்காளர்களின் ஆதார் எண், செல்லிடப்பேசி, மின்னஞ்சல் முகவரி ஆகியன இதுவரை சேகரிக்கப்பட்டுள்ளதாகவும், அடுத்த மாதம் 31 ஆம் தேதி வரை வாக்குச் சாவடி அலுவலர்கள் வீடு வீடாக வந்து விவரங்களைப் பெறுவர் என்றும் அவர் கூறினார்.


  ஆதார் விவரங்களை வாக்காளர் பட்டியலுடன் இணைக்கும் பணிக்காக, தமிழகம் முழுவதும் 66 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்குச் சாவடிகளில் கடந்த ஞாயிற்றுக்கிழமை சிறப்பு முகாம் நடைபெற்றது. இந்த முகாம் குறித்து தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களுக்கு தலைமைத் தேர்தல் அதிகாரி சந்தீப் சக்சேனா, திங்கள்கிழமை அளித்த பேட்டி:   தமிழகம் முழுவதும் நடந்த சிறப்பு முகாமில் சுமார் 25 லட்சம் பேர் பங்கேற்றனர். அவர்களிடம் இருந்து ஆதார் எண், செல்லிடப்பேசி, மின்னஞ்சல் போன்ற விவரங்கள் போன்றவை பெறப்பட்டன. சிறப்பு முகாமுடன் சேர்த்து, மாநிலம் முழுவதும் இதுவரை 2.4 கோடி பேரின் விவரங்கள் பெறப்பட்டுள்ளன. அதில், 66.5 லட்சம் பேரின் விவரங்கள் கணினியில் பதிவிடப்பட்டுள்ளன. தமிழகத்தில் மொத்தம் 5.6 கோடி வாக்காளர்கள் உள்ளனர். அதில், 2.4 கோடி அதாவது 50 சதவீதம் பேரின் விவரங்கள் இதுவரை பெறப்பட்டுள்ளன.

    மூன்று பேரவை தொகுதிகள்: தமிழகத்தில் தருமபுரி மாவட்டம் பாலக்கோடு, பெண்ணாகரம், திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி ஆகிய சட்டப் பேரவைத் தொகுதிகளில் வாக்காளர்களின் ஆதார் விவரங்கள் அனைத்தும் சேகரிக்கப்பட்டுள்ளன.

எனவே, இந்தத் தொகுதிகளில் சேகரிக்கப்பட்ட விவரங்களை கணினியில் பதிவு செய்து விவரங்களை உறுதிப்படுத்தும் பணிகள் தொடங்கவுள்ளன. இதற்காக மூன்று பேரவைத் தொகுதிகளைச் சேர்ந்த வாக்குச் சாவடி அலுவலர்களுக்கு பயிற்சிகள் அளிக்கப்பட்டுள்ளன.

தேசிய வாக்காளர் பதிவேடு: நாட்டிலுள்ள அனைத்து மக்களின் விவரங்களும் தேசிய மக்கள் தொகை பதிவேட்டில் உள்ளன. தமிழகத்தில் இந்தப் பதிவேட்டின் விவரங்களை கணினி வழியே தமிழக தேர்தல் அலுவலகம் பெற்றுள்ளது. ஆதார் இல்லாதவர்களுக்கு, இந்த பதிவு விவரங்களின் அடிப்படையிலும் வாக்காளர் பட்டியல் இணைப்புப் பணி நடைபெறும்.


   வாக்காளர் பட்டியலை செம்மைப்படுத்தி உறுதிப்படுத்தும் திட்டத்தை, மே மாத இறுதிக்குள் முடிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. காரணம், இந்தப் பணியில் ஈடுபட்டுள்ள பல வாக்குச் சாவடி அதிகாரிகள் அடுத்த கல்வியாண்டு தொடங்கி விட்டால் வேறு பணிக்குச் சென்று விடுவர். இதனால், மே மாத இறுதியை இலக்காக வைத்து பணிகள் நடைபெற்று வருகின்றன.

 தமிழகம் முதலிடம்: வாக்காளர் பட்டியலை செம்மைப்படுத்தி உறுதிப்படுத்தும் திட்டம், தமிழகத்தில்தான் வேகமாகச் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மற்ற மாநிலங்களில் இந்தப் பணி இப்போது விழிப்புணர்வு கட்டத்திலேயே உள்ளது. அவர்கள் ஆகஸ்ட் மாதத்துக்குள் முடிக்க இலக்கு நிர்ணயித்துள்ளனர். மேலும், ஆதார் விவரங்களை, வாக்காளர் பட்டியலுடன் இணைக்கும் பணிக்காக தனித்த மென்பொருளை உருவாக்கியது, தமிழக தேர்தல் அலுவலகம் மட்டும் தான். வேறெந்த மாநிலத்திலும் இவ்வாறு தனியான மென்பொருள் உருவாக்கப்படவில்லை.

   பெங்களூருவில் கூட்டம்: ஆந்திரம், தெலங்கானா, கர்நாடகம், புதுச்சேரி, லட்சத்தீவு, தமிழகம், கேரளம் உள்ளிட்ட தென் மாநிலங்களை உள்ளடக்கிய தலைமைத் தேர்தல் அதிகாரிகளின் ஆலோசனைக் கூட்டம் பெங்களூருவில் இந்திய தேர்தல் ஆணையத்தின் துணை ஆணையாளர் தலைமையில் வரும் 15- ஆம் தேதி நடைபெறுகிறது. இந்தக் கூட்டத்தில் வாக்காளர் பட்டியலைச் செம்மைப்படுத்தி விவரங்களை உறுதிப்படுத்தும் திட்டம் தமிழகத்தில் செயல்படுத்தப்படும் விதமும், தனித்த மென்பொருள் உருவாக்கத்தால் ஏற்பட்டுள்ள நன்மைகள் குறித்தும் விளக்குவேன்

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...