ஆதார்: தமிழகத்தில் 55% பேரின் விவரங்கள் சேகரிப்பு

ஆதார் விவரங்களை வாக்காளர் பட்டியலுடன் இணைக்கும் திட்டத்துக்காக, தமிழகத்தில் 55 சதவீதம் பேரின் விவரங்கள் சேகரிக்கப்பட்டுள்ளதாக தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சந்தீப் சக்சேனா (படம்) தெரிவித்தார்.


வாக்காளர் பட்டியலை செம்மைப்படுத்தி, விவரங்களை உறுதிப்படுத்தும் திட்டம் கடந்த மார்ச் 3-ஆம் தேதி தமிழ்நாடு முழுவதும் தொடங்கப்பட்டது. இந்தத் திட்டத்தின் கீழ், ஆதார் விவரங்கள் வாக்காளர் பட்டியலுடன் இணைக்கப்பட்டு வருகின்றன. இதன் மூலம், போலி வாக்காளர்களின் எண்ணிக்கையைத் தடுக்க திட்டமிடப்பட்டுள்ளது.

ஆதார் விவரங்களை வாக்காளர்களிடம் இருந்து சேகரிப்பதற்காக தமிழகத்தில் நான்கு சிறப்பு முகாம்களை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, கடந்த 12-ஆம் தேதி சிறப்பு முகாம் ஏற்கெனவே நடத்தப்பட்டுள்ளது. மீண்டும் வரும் 26 ஆம் தேதி சிறப்பு முகாம் நடத்தப்படுகிறது. தமிழகத்திலுள்ள 64 ஆயிரத்து 96 வாக்குச் சாவடிகளில் இந்த முகாம் நடைபெறுகிறது.

கடந்த ஜனவரி 1- ஆம் தேதி நிலவரப்படி, தமிழகத்தில் மொத்தமுள்ள 5.62 கோடி வாக்காளர்களில் இதுவரை சுமார் 3 கோடி வாக்காளர்களின் விவரங்கள் பெறப்பட்டுள்ளன. இது மொத்த வாக்காளர்களில் (5.62 கோடி பேர்) 55 சதவீதமாகும். அதேபோன்று இதுவரை பெறப்பட்ட விவரங்களில் 1.82 கோடி வாக்காளர்களின் விவரங்கள் கணினியில் பதிவு செய்யப்பட்டு விட்டன. இதன் மூலம் 33% பணிகள் முடிவடைந்துள்ளன.

தமிழகம் முழுவதும் தினமும் 8 லட்சம் முதல் 15 லட்சம் வாக்காளர்களின் விவரங்கள் பெறப்படுவதாகவும், 10 லட்சம் முதல் 15 லட்சம் பேரின் விவரங்கள் கணினியில் பதிவு செய்யப்படுகின்றன.

கடந்த 12 ஆம் தேதி நடந்த சிறப்பு முகாமின் போது, வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு, நீக்கம் உள்ளிட்ட பணிகளுக்காக 5.72 லட்சம் விண்ணப்பப் படிவங்கள் பெறப்பட்டன. ஒரு மாவட்டத்தில் இருந்து மற்றொரு மாவட்டத்துக்கு மாற்ற வேண்டுமெனில் மட்டுமே படிவம் 6-ஐ அளிக்க வேண்டும். ஒரே தொகுதிக்குள் மாற்றம் செய்ய வேண்டும் என்றால் படிவம் 8ஏ-ஐ அளித்தால் போதும்.

தமிழகத்தில் 4 கோடியே 18 லட்சத்து 65 ஆயிரத்து 832 பேருக்கு ஆதார் அடையாள அட்டைகள் வழங்கப்பட்டுள்ளதாக தனித்துவ அடையாள ஆணையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தின் மொத்த மக்கள் தொகையில் இது 81.4 சதவீதம் ஆகும். இந்த விவரங்களை வாக்காளர் பட்டியலுடன் இணைக்கும் பணிகள் இப்போது நடந்து வருகின்றன.

ஒரே விண்ணப்ப படிவம்: வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு, முகவரி மாற்றம், புதிதாக வாக்காளர் அடையாள அட்டை பெறுவது உள்ளிட்ட பணிகளுக்கு தனித்தனியான படிவங்கள் உள்ளன. பல்வேறு விண்ணப்பங்களை தேவைக்கேற்ப பயன்படுத்த வேண்டியிருக்கிறது. இதில் குழப்பங்கள் ஏற்பட்டு வருவதால், எதிர்காலத்தில் அனைத்திற்கும் ஒரே படிவத்தைப் பயன்படுத்தும் திட்டம் உள்ளது என்று சந்தீப் சக்சேனா தெரிவித்தார்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...