இணைய சமநிலை பாதிக்கக் கூடாது

இணையதளம் என்பது நாட்டின் சொத்து. அலைக்கற்றைகள் மூலமாக இணைய சேவை அளிப்பதற்கு மத்திய அரசு உரிமங்கள் தருகிறது. இவ்வாறு உரிமம் பெற்ற நிறுவனங்கள் இணையதள தகவல் தொகுப்புகளைக் கட்டுப்படுத்த விரும்புகின்றன. இதனால் இணைய சமநிலை பாதிக்கப்படும் சூழல்
உருவாகியுள்ளது.

தொலைத்தொடர்பு நிறுவனங்களைக் கண்காணிக்கும் பொறுப்பில் உள்ள அமைப்பான தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (டிராய்) இதுகுறித்து வரைவு அறிக்கை ஒன்றை மார்ச் 27-ஆம் தேதி மக்கள் கருத்துக் கேட்புக்காக வெளியிட்டுள்ளது.

அந்த அறிக்கையில் இணையதளங்களை கட்டணமின்றிப் பார்க்கும் வசதி தொடர்ந்தால் தனிமனிதர் மற்றும் நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படும் என்று கூறப்பட்டுள்ளது.

எந்தெந்த இணையப் பக்கங்களைக் காண வேண்டும் என்பதை பயன்படுத்தும் வாடிக்கையாளர்தான் தீர்மானிக்க வேண்டும்.

ஆனால் இணையதள நிறுவனங்கள் அளிக்கும் கட்டணத்துக்கு ஏற்ப இணையத்தின் வேகம் இருக்கும் என்பதால் சில இணையதளங்களுக்கு மட்டுமே முன்னுரிமை கிடைக்கும். இதன்மூலம் மக்கள் தங்கள் விருப்பப்படி இணையப் பக்கங்களைப் பயன்படுத்தும் வாய்ப்பு பறிபோகும்.

இணையதள சமநிலையைச் சீர்குலைக்கும் வகையில், தனியார் பெருநிறுவனங்களுக்குச் சாதகமாக தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் முடிவு எடுக்கக் கூடாது என்று இதுவரை 8 லட்சம் வாடிக்கையாளர்கள் "டிராய்'க்கு மின்னஞ்சல் அனுப்பியுள்ளனர்.

மக்கள் தேவைகளுக்கு ஏற்ப எவ்விதக் கட்டுப்பாடுகளும் இல்லாமல் விருப்பம் போல இணையதள சேவைகளைப் பயன்படுத்திக் கொள்வதற்கு ஏற்ற வகையில் மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...