புதுச்சேரியில் கேம்பஸ் இண்டர்வியூ என்ற பெயரில் முகாமிடும் சில போலி சாப்ட்வேர் கம்பெனிகளால், தனியார் பொறியியல் கல்லுாரி மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகி வருகிறது.
புதுச்சேரியில் இரண்டு அரசு
பொறியியல் கல்லுாரிகளும், 17 தனியார் பொறியியல் கல்லுாரிகளும் உள்ளன. இவற்றிலிருந்து ஆண்டுதோறும் 7 ஆயிரம் மாணவர்கள் படித்து வெளியே வருவதால் திறமையான பொறியியல் பட்டதாரிகளுக்கு பஞ்சமில்லை.
புதுச்சேரி மாநிலம் உயர்கல்வி கேந்திரமாக மாறியுள்ள நிலையில், சாப்ட்வேர் கம்பெனிகளின் கவனம் புதுச்சேரி தனியார் பொறியியல் கல்லுாரிகள் மீது திரும்பியுள்ளது. மூன்றாமாண்டு படிக்கும்போதே கேம்பஸ் இண்டர்வியூ என்ற பெயரில் வளாக நேர்காணல் நடத்தி மாணவர்களுக்கு பணியாணை வழங்கி புக்கிங் செய்துகொள்கின்றன.
டுபாக்கூர்
இந்த வளாக நேர்காணல்களில் டுபாக்கூர் கம்பெனிகளும் தற்போது ஊடுருவி, பொறியியல் பட்டதாரிகளின் எதிர்காலத்தோடு விளையாட துவங்கியது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
கடந்த சில மாதங்களுக்கு முன் கே.பி.,என்ற பெயரிலான பெங்களூரு கம்பெனி தனது நிறுவனத்திற்காக புதுச்சேரி தனியார் பொறியியல் கல்லுாரியில் கேம்பஸ் இண்டர்வியூ நடத்தி 30 மாணவர்களுக்கு பணியாணை வழங்கியது. வேலை கிடைத்த மாணவர்கள், கம்பெனி பெயரில் 30 ஆயிரம் ரூபாய் டிபாசிட் கட்ட வேண்டும். ஓராண்டு வேலையை விட்டு நிற்க கூடாது என, நிபந்தனைகளை விதித்தது.
வேலை கிடைத்த மகிழ்ச்சியில் அனைத்து அக்கிரிமெண்டு களிலும் கையெழுத்திட்ட மாணவர்கள் பெங்களூரு சென்று வேலை செய்துள்ளனர். மூன்று மாதம் உழைத்தும், சம்பளம் தரவில்லை. விளக்கம் கேட்டபோது, சம்பளம் தர முடியாது. டிபாசிட் தொகையை பெற்றுக்கொள்ளுங்கள் என, கூறி செக் கொடுத்துள்ளனர்.
திடீரென கம்பெனியை இழுத்து மூடி தலைமறைவாகினர். கம்பெனி கொடுத்த செக்கை வங்கியில் போட்டால் பணம் இல்லாமல் திரும்பி வருகிறது. கம்பெனி மொபைல் எண்ணை தொடர்பு கொண்டால் துண்டிக்கப்பட்டுள்ளது.
ரூ.1 கோடி ஏமாற்றம்
புதுச்சேரியில் கடந்த சில மாதங்களில் மட்டும் இது போல் பல கம்பெனிகளில் 300 மாணவர்கள் வரை தலா ஒரு லட்சம் ரூபாய் வரை பணத்தை டிபாசிட் கட்டி இழந்துள்ளனர். ஏமாந்த தொகை ஒரு கோடி ரூபாயை தாண்டும். பாதித்த மாணவர்கள். தாங்கள் படித்த கல்லுாரியை தொடர்பு கொண்டபோது எந்த உதவியும் கிடைக்கவில்லை. இதில் நாங்கள் எதுவும் செய்ய முடியாது என கைவிரித்துவிட்டன.
தற்போது கையில் வெற்று காசோலையோடு யாரிடம் புகார் செய்வது என, செய்வதறியாது தவித்து வருகின்றனர். சில தனியார் பொறியியல் கல்லுாரிகள் 100 சதவீத பிளேஸ் மெண்ட் என்று தங்களை விளம்படுத்திக் கொள்ள, ஏதும் அறியாத மாணவர்களின் எதிர்காலத்தோடு விளையாடுகின்றன. தங்களது கல்வி நிறுவனத்திற்கு வருவது நல்ல கம்பெனியா.. மாணவர்களின் எதிர்காலம் நன்றாக இருக்குமா என்றெல்லாம் விசாரிக்காமல் டுபாக்கூர் கம்பெனிகளுக்கு அனுமதி அளிக்கின்றன. இதனால் எதுவும் தெரியாத அப்பாவி மாணவர்கள் டிபாசிட் தொகையோடு, பல மாத உழைப்பையும் கொடுத்து ஏமாறுகின்றனர்.
நடவடிக்கை
உயர்கல்வி துறை நடவடிக்கை எடுத்து, புதுச்சேரிக்கு கேம்பஸ் இண்டர்வியூக்கு வரும் கம்பெனிகளின் விபரத்தை பதிவு செய்வதோடு, அந்த கம்பெனிகள் நல்ல கம்பெனியா என மாணவர்களுக்கு தெளிவுப்படுத்த வேண்டும். பொறியியல் பட்டதாரிகள் ஏமாற்றுவதை தடுக்க அரசு மற்றும் தனியார் பொறியியல் கல்லுாரியில் நடக்கும் அனைத்து கேம்பஸ் இண்டர்வியூக்களை ஒரே இடத்தில் நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்