மருத்துவ மேற்படி கனவாகிறது ....

தனியார் மருத்துவ கல்லுாரிகளில் 50 சதவீத இட ஒதுக்கீடு கிடைக்காததால், புதுச்சேரி எம்.பி.பி.எஸ்., மாணவர்களின் மருத்துவ மேற்படிப்பு கனவு தகர்ந்து வருகிறது.


புதுச்சேரி மாநிலத்தில் உள்ள ஏழு தனியார் மருத்துவ கல்லுாரிகளில் 900 எம்.பி.பி.எஸ்., இடங்கள் வரை உள்ளன. கல்லுாரி துவங்கும் போது 50 சதவீத இடங்களை அரசுக்கு வழங்குவதாக உறுதியளித்த தனியார் கல்லுாரிகள், அதன் பிறகு செய்வதில்லை.

மேற்படிப்பு

நிகர்நிலை பல்கலைக்கழகம் என்ற பெயரில் ஆண்டுதோறும் மனம்போன போக்கில் சீட்களை தருகின்றன. அரசும் பேச்சு வார்த்தை நடத்தி, சீட்டுகளை நீண்ட இழுபறிக்கு பின் பெற்று வருகிறது. எம்.பி.பி.எஸ்., படிப்பில் 50 சதவீத இடஒதுக்கீடு தரும் கல்லுாரிகள் எம்.டி., - எம்.எஸ்., போன்ற மருத்துவ உயர் படிப்புகளில் இட ஒதுக்கீடு தருவதில்லை.

ஏழு தனியார் மருத்துவ கல்லுாரிகளில், 20 வகையான மருத்துவ மேற்படிப்புகளில் மொத்தம் 276 இடங்கள் உள்ளன. இதில் ஒரு இடம் கூட புதுச்சேரி மாணவர்களுக்கு கிடைப்பதில்லை. இதேபோல், ஜிப்மரில் உள்ள 200 மருத்துவ மேற்படிப்புகளில் ஒரு இடமும் தரவில்லை. அரசும் வலியுறுத்தி கேட்பதில்லை.

வீணாகும் திறன்

எம்.பி.பி.எஸ்., படிப்பை பொருத்தவரை சில லட்சங்களில் முடித்து விட முடியும். மருத்துவ மேற்படிப்புக்கு குறைந்தது ஒரு கோடியாவது வேண்டும். இதனால், சென்டாக் மூலம் மருத்துவ படிப்பு முடித்த புதுச்சேரி மாணவர்கள், மருத்துவ மேற்படிப்பு பற்றி நினைத்து கூட பார்க்க முடிவதில்லை.

திறமை இருந்தும் எம்.பி.பி.எஸ்., மட்டுமே அவர்களால் படிக்க முடியும் என்ற நிலை உள்ளது. எம்.பி.பி.எஸ்., முடித்து தனியார் மருத்துவ கல்லுாரிகளில் குறைந்த சம்பளத்தில் பணிபுரியும் நிலை உள்ளது. இதனால் திறமையான புதுச்சேரி மாணவர்களின் திறமை வீணாகிறது.

அரசு மருத்துவ கல்லுாரி துவங்கி, ஐந்தாண்டுகளாகிறது. தற்போது, 11 மருத்துவ மேற்படிப்புகளை ஆரம்பிக்க இந்திய மருத்துவ கவுன்சிலிங்கிடம், 75 லட்சம் ரூபாயை அரசு செலுத்தியுள்ளது. இதுவரை அனுமதி தராததால், அரசு மருத்துவ கல்லுாரியில் மேற்படிப்புகளிலும் மாணவர்கள் சேர முடியவில்லை.

புதுச்சேரி அரசு மருத்துவமனைகளில் சிறப்பான மருத்துவ வசதி இருந்தாலும் உயர் சிகிச்சைக்கான டாக்டர்கள் இல்லை. இதனால் எதற்கெடுத்தாலும் சென்னைக்கு தான் செல்ல வேண்டிய நிலை உள்ளது.

நடவடிக்கை தேவை

மருத்துவ மேற்படிப்புகளில் 50 சதவீத இடங்களை பெற அரசு முனைப்பு காட்டினால், குறைந்த செலவில், ஏழை மருத்துவ மாணவர்களின் மருத்துவ மேற்படிப்பு கனவு நனவாவதோடு, திறமையான மருத்துவ சிகிச்சை நிபுணர்கள் மாநிலத்திற்கு கிடைப்பர். எனவே, மருத்துவ கல்லுாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்த நிபுணர் குழுவை அரசு அமைத்து, இந்தாண்டே 50 சதவீத மருத்துவ மேற்படிப்பு இடங்களை பெற நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கல்வியாளர்கள் எதிர்பார்க்கின்றனர்

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...