அடையாறு தனியார் பள்ளியில், சுவர் இடிந்து விழுந்து, இரு மாணவியர் பலியான சம்பவத்தையடுத்து, ஆபத்தான நிலையில் உள்ள பயன்பாடற்ற சமையல் அறை சுவரை இடிக்க, நடவடிக்கை எடுத்துள்ளதாக போலீசார் கூறினர்.
அடையாறு, பெசன்ட் அவென்யூ சாலையில், அரசு உதவி பெறும், அவ்வை இல்லம் பெண்கள் மேல்நிலை பள்ளி உள்ளது. பள்ளியின் முகப்பு பக்கவாட்டு பகுதியில், 40 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட, விடுதி சமையல் அறை ஒன்று, மேற்கூரை இல்லாமல் பயன்பாடின்றி இருந்தது.
அதனருகில், ௫ அடி இடைவெளியில் பள்ளி முகப்பு பகுதி சுற்றுச்சுவர் உள்ளது. நேற்று முன்தினம், அந்த சுவரில் கட்டப்பட்டிருந்த கயிறை பிடித்து, மாணவியர் விளையாடிய போது, சுவர் இடிந்து விழுந்தது. அதில், மாணவியர் மோனிஷா, நந்தினி ஆகியோர் இறந்தனர். மாணவி, சந்தியா பலத்த காயமடைந்து, தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். மாணவியரின் பெற்றோர் அளித்த புகாரையடுத்து, மூன்று பிரிவுகளில், வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. நேற்று மாலை, பெசன்ட் நகர் மயானத்தில், மாணவியர் மோனிஷா, நந்தினியின் இறுதிச்சடங்குகள் நடந்தன. அந்த பள்ளியில் ஆபத்தான நிலையில் உள்ள, விடுதி சமையல் அறையின் மற்றொரு பக்க சுவரை இடிக்க, பள்ளி நிர்வாகத்திடம் கேட்டு கொண்டதாக, சாஸ்திரி நகர் போலீசார் கூறினர்.
இன்று, பள்ளி திறக்கப்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது.