தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக் கான ஆண்டு இறுதித் தேர்வு கள் வரும் 22-ம்
தேதியுடன் நிறை வடைகின்றன. இதையடுத்து, கோடை விடுமுறை அளிக்கப் படுகிறது.
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 2015-16-ம் கல்வி யாண்டுக்காக
வகுப்புகள் ஜூன் 2-ம் தேதி தொடங்கப்பட உள்ளன.
இதையடுத்து, பள்ளிகள் திறந்த வுடனேயே மாணவர்களுக்கு இலவச பஸ் பாஸ் வழங்க போக்கு வரத்துத் துறை திட்டமிட்டுள்ளது. கடந்த ஆண்டு தமிழகம் முழுவதும் சுமார் 26 லட்சம் பஸ் பாஸ் வழங்கப்பட்டுள்ள நிலையில், இந்த கல்வி ஆண்டில் மாணவர்களின் தேவைக்கு ஏற்றவாறு வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.
இது தொடர்பாக போக்குவரத் துத் துறை அதிகாரிகளிடம் கேட்ட போது, ‘‘வரும் கல்வி ஆண்டில் பள்ளி மாணவர்களுக்கு விரை வாக பஸ் பாஸ் வழங்க பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறோம். சம்பந்தப்பட்ட போக்குவரத்துக் கழகங்களின் உயர் அதிகாரிகளு டன், பள்ளிக் கல்வித் துறை அதிகாரி களும் ஆலோசனை நடத்தி வரு கின்றனர். கல்வித்துறை அதிகாரி களிடம் இருந்து மாணவர்களின் முழு விவரங்கள் வந்தவுடன் உடனுக்குடன் இலவச பஸ் பாஸ் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றனர்.