தகவல் உரிமம் மூலம் விவரங்கள் கேட்ட தகவல் ஆர்வலர் ஒருவரை சம்பந்தப்பட்ட நபரான அரசு ஊழியர் போனில் அழைத்து தரக்குறைவாக பேசி மிரட்டும் வாட்ஸ் அப் தகவல் சென்னை முழுவதும் தீயாக பரவி பரபரப்பை ஏற்படுத்துகிறது.வாட்ஸ் அப்பில் பல முக்கிய ஆடியோக்கள் உலா வந்து
பெரிய மனிதர்களின் முகத்திரையை கிழித்துள்ளது.
ஏசியின் கிளுகிளு பேச்சு முதல் வட்டம் பகுதியின் பணபேரம் வரை பல தகவல்கள் வெளியே வந்து அம்பலமாகி வருகிறது. அந்த வரிசையில் தகவல் ஆணைய உரிமை மூலம் பொதுப்பணித்துறையில் அட்டகாசம் செய்து கைதான ஒரு நபரை பற்றியும் அவர் மேல் எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்தும் எடுக்கப்படாத நடவடிக்கை குறித்தும் கேள்விகேட்ட சமூக ஆர்வலர் மற்றும் சட்டம் பயிலும் மாணவர் ஒருவரிடம் போன் போட்டு பேசும் அந்த பொதுப்பணித்துறை ஊழியர் மிரட்டுவதும் மிகவும் கொச்சையாக பேசுவதும், சமூக ஆர்வலரின் குடும்பத்தாரை தரக்குறைவாக பேசுவதும் வெளியாகி உள்ளது.
தஞ்சாவூரை சேர்ந்தவர் பார்த்திபன். இவர், அங்குள்ள பொதுப்பணி துறையில் இளநிலை உதவியாளராக பணியாற்றி வருகிறார். பொதுப்பணி துறையில் சாதாரண நான்காம் தகுதி அலுவலராக இருந்தாலும் உடன் வேலை செய்பவர்களை, மேல் அதிகாரிகளை மிரட்டுவதில் முதல் நிலை அலுவலரை விட வேகமாக செயல்பட்டு வந்துள்ளார். மாவட்ட அமைச்சருக்கு வேண்டிய பட்டவன் என்றே பலரையும் மிரட்டுவது, பெரிய மனிதர்களை பேரை சொல்லி அவர் வேண்டப்பட்டவர், இவர் வேண்டப்பட்டவர் என மிரட்டுவதை வாடிக்கையாக வைத்துள்ளார். இதன் விளைவு, கடந்த மாதம் 25ம்தேதி பார்த்திபனை பொதுப்பணித்துறை ஆட்களே புகார் கொடுத்து போலீசில் பிடித்து கொடுக்க 4 நாட்கள் சிறையில் இருந்துவிட்டு வந்துள்ளார். ஆனாலும், தனது செல்வாக்கை பயன்படுத்தி சிறையில் இருந்த நாட்களை பற்றி எந்தவிதமான துறை ரீதியான நடவடிக்கைக்கும் உட்படாமல் பார்த்துக்கொண்டு அதே அதிகார பலத்துடன் வலம் வந்துள்ளார்.
இதை பார்த்த அதே துறையை சேர்ந்த ஒருவர் தனக்கு தெரிந்த சமூக ஆர்வலரும் உயர் நீதிமன்ற வழக்கறிஞர் பதிவுக்காக காத்திருக்கும் மாணவர் சரவணகுமார் என்பவரிடம் விவரத்தை சொல்ல அவர், பார்த்திபனை கைது செய்த காவல் நிலையத்துக்கு தகவல் ஆணையம் பெறும் சட்ட உரிமை மூலம் பார்த்திபன் கைது பற்றியும், இதுபற்றி என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது, அவர் கைது செய்யப்பட்டது பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு தெரியப்படுத்தப்பட்டதா, அவர் மீது துறை ரீதியாக என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்பது போன்ற கேள்விகளை அளித்திருந்தார்.
கடந்த 11ம் தேதி அளிக்கப்பட்ட கடிதத்திற்கு கடந்த 15ம் தேதி சம்பந்தப்பட்ட காவல் நிலையத்திலிருந்து இதுபோல் கேட்டுள்ளீர்களே என்ன சார் செய்யலாம் என்று உதவி ஆய்வாளர் ஒருவர் கேட்டுள்ளார். நான் கேட்டதற்கு பதில் கொடுங்கள் என்னிடம் என்ன செய்யலாம் என ஏன் கேட்கிறீர்கள் என சரவணகுமார் கேட்டுள்ளார். அன்று மதியமே சரவணகுமாருக்கு போன் வந்துள்ளது. அந்த போனில் பேசும் பார்த்திபன் எடுத்த உடனேயே வாடா போடா என ஏக வசனத்தில் ஆரம்பிக்கிறார். என்னை பற்றி தகவல் கேட்க நீ யாருடா என திட்டும் அவர் நாங்கத்தாண்டா அரசாங்கம், உன்னையும் உன்னிடம் தகவல் கேட்க சொன்னவனையும் கொன்று விடுவோம் என மிரட்டுகிறார்.
உங்களுக்கு என்ன சார் வேண்டும் என கேட்கும் சரவணகுமாரிடம் உனக்கு என்ன வேண்டும் என்னை பற்றி எதுக்கு தகவல் கேட்கிறாய். நான் மன உளைச்சலில் இருக்கிறேன். ஒழுங்க இருந்துக்க உனக்கு அவரை தெரியுமா இவரை தெரியுமா என தஞ்சை மாவட்டத்திலுள்ள முக்கிய பெரிய மனிதர்கள் பெயரை சொல்லி பகிரங்க மிரட்டல் விடுக்கிறார். இதுபற்றி சமூக ஆர்வலர் சரவணகுமாரிடம் கேட்டபோது, போலீசாரிடம் நான் தகவல் பெறும் சட்டத்தின் கீழ் கேட்ட தகவல் அவர் கைக்கு எப்படி போனது. எனது போன் நம்பரை அவர் எப்படி எடுத்தார். என்பதெல்லாம் கேள்விக்குரிய விஷயங்களே. இதுபோல் காவல்துறை செயல்பட்டால் நான் என்ன செய்ய முடியும் இதுபற்றி நான் புகார் கொடுத்துள்ளேன் என்றார்.