பெண்கள் பாதுகாப்புக்கு மொபைல் போன் 'ஆப்';

பெண்கள் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில், தமிழக போலீசார் புதிய மொபைல்போன் 'ஆப்' அறிமுகம் செய்ய உள்ளனர்; கோவையில் முதல்முறையாக சோதனை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.


தனியாக செல்லும் பெண்களை பாலியல் ரீதியலான துன்பங்களுக்கு ஆள்படுத்துதல், வீடுகளில் தனியாக இருக்கும் முதியவர்கள், பெண்களை குறிவைத்து நகை, பணம் கொள்ளையடிப்பது போன்ற குற்றச் செயல்கள் அரங்கேறி வருகின்றன. இதுபோன்ற குற்றங்களை தடுக்கும் நடவடிக்கைகளில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.இதன் ஒரு பகுதியாக, பாதுகாப்பு வசதிகளுடன் கூடிய புதிய மொபைல்போன் அப்ளிகேஷன் தயாரிக்கப்பட்டு, விரைவில் செயல்படுத்தப்பட உள்ளது. இந்த மொபைல்போன் 'ஆப்' செயல்பாடு மற்றும் பயன்பாடு குறித்த ஆலோசனை கூட்டம், கோவை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நேற்று நடந்தது.

தமிழக கூடுதல் டி.ஜி.பி.,(தொழில்நுட்ப பிரிவு) கந்தசாமி தலைமை வகித்தார். கூட்டத்தில், அறிமுகப்படுத்தப்பட உள்ள மொபைல்போன் ஆப் குறித்து மாநகர போலீசாரிடம் கருத்துக்கள் கேட்கப்பட்டன. இதன் பயன்பாடு குறித்து போலீசாருக்கு விளக்கப்பட்டது. இது, சோதனை முயற்சியாக, கோவை யில் விரைவில் செயல்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

போலீஸ் அதிகாரிகள் கூறியதாவது: பெண்கள் உள்பட அனைவரின் பாதுகாப்புக்கும் ஏற்ற வகையில், 'கார்டியன் ஆப்' என்ற மொபைல்போன் ஆப் உருவாக்கப்பட்டுள்ளது. விண்டோஸ் மற்றும் ஆன்ட்ராய்டு போன்களில் பயன்படுத்தும் வகையில், 'மைக்ரோசாப்ட்' நிறுவனம் வடிவமைத்துள்ளது. இந்த 'ஆப்' மொபைல்போனில் பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும்.இந்த மொபைல்போன் 'ஆப்' ஒரு இடத்துக்கு தனியாக செல்லும்போது, ஆபத்து நேரங்களில் தொட்டால் உடனடியாக போலீஸ் கட்டுப்பாட்டு அறை, நெருங்கிய நண்பர்கள் மற்றும் பேஸ்புக் சமூக வலைதளங்களில் பதிவாகும் வகையில் இணைக்கப்படும். போலீஸ் கட்டுப்பாட்டு அறையில் வைக்கப்படும் 'சர்வர்' ஆபத்துகால அழைப்புகள் எங்கிருந்து வருகிறது என்பதை 'மேப்' மூலம் தெரிந்து கொண்டு உடனடியாக மீட்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

சோதனை முயற்சியாக இன்னும் சில நாட்களில் கோவை மாநகர போலீசில் செயல்படுத்தப்பட உள்ளது. தொடர்ந்து தமிழகம் முழுவதும், இந்த 'ஆப்' பயன்பாடு விரிவாக்கம் செய்யப்படும்.இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்தனர்.போலீஸ் கமிஷனர் விஸ்வநாதன், மேற்கு மண்டல ஐ.ஜி., சங்கர், துணை கமிஷனர்கள், உதவி கமிஷனர்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.

புதிய பெயர் என்ன?
பாதுகாப்பு அம்சங்களுடன் தயாரிக்கப்பட்டுள்ள புதிய சாப்ட்வேர், 'கார்டியன் ஆப்' என்று அழைக்கப்படுகிறது. இதற்கு தமிழில் தகுந்த பெயர் வைக்க போலீசாரிடம் கருத்து கேட்கப்பட்டுள்ளது. தேர்ந்தெடுக்கப்படும் பெயரை சொல்லும் போலீசாருக்கு, 10 ஆயிரம் ரூபாய் ரொக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...