மருத்துவத்துறையில் லேப்-டெக்னீசியன் பணி

மருத்துவத்துறையில் காலியாக உள்ள லேப்-டெக்னீசியன் பணிக்கு, வேலை வாய்ப்பு அலுவலக முதிர்வு பட்டியல் வெளியிடப்பட்டுள்ளன.

இதுகுறித்து மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு
மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியத்தால், காலியாக உள்ள 676 லேப் டெக்னீசியன் பணியிடங்களுக்கு, அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளன.

இதற்கு விண்ணப்பம் அளிக்க பிளஸ் 2 தேர்ச்சிப் பெற்று, மருத்துவக் கல்வி இயக்குனரகத்தால் அங்கீகரிக்கப்பட்ட ஏதாவது ஒரு நிறுவனத்தில், மருத்துவ ஆய்வக உதவியாளர் சான்று (CMLT) பெற்றிருக்க வேண்டும். வரும் ஜூலை மாதம் 1ம் தேதி அன்று, 35 வயது வரை உள்ள எஸ்.சி., - எஸ்.டி., பிரிவினரும், 32 வயது வரையுள்ள பி.சி.,- எம்.பி.சி.,- பி.சி.எம்., வகுப்பினரும், 30 வயது வரையுள்ள ஓ.சி., வகுப்பினரும் தேர்வு செய்யப்பட உள்ளனர். இப்பணிக்கு, மாநில அளவிலான உத்தேச பதிவு மூப்பு விவரம் www.tnvelaivaaippu.gov.in என்ற இணையதளத்தில் MSRB Lisz என்ற தலைப்பில் வெளியிடப்பட்டுள்ளது.

மேலும் மருத்துவக் கல்வி இயக்குனரகத்தால் அங்கீகரிக்கப்பட்ட, கல்வி நிறுவனங்களில் பட்டியலும், வெளியிடப்பட்டுள்ளன. இந்த கல்வி நிறுவனங்களில் படித்து, சான்று பெற்றவர்கள் மட்டுமே இப்பணிக்கு தகுதியானவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்தவர்களின், பதிவு மூப்பு பட்டியல், மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலக விளம்பர பலகையில் ஒட்டப்பட்டுள்ளது.

தகுதியுள்ள மனுதாரர்கள் பெயர் விடுபட்டிருந்தால், வரும் 30ம் தேதிக்குள், மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம். இத்தகவலை மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலக உதவி இயக்குனர் மணி தெரிவித்துள்ளார்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...