மாணவர்கள் விரும்பி படிப்புகளை தேர்வு செய்தால் தான் வெற்றி பெறுவது எளிதாகும்‘ என சென்னை இன்போசிஸ் நிறுவன மனிதவள மேம்பாட்டு பிரிவு
முதன்மை அதிகாரி சுஜித்குமார் தெரிவித்தார
பிளஸ் 2 முடித்து உயர்கல்விக்கு செல்லும் மாணவர்களுக்கு சரியான வழிகாட்டுதல் தேவை. பள்ளிப் படிப்பில் மதிப்பெண் மட்டுமே அவர்களின் சிந்தனையில் இருக்கும். மதிப்பெண்ணை மட்டும் வைத்து வேலைவாய்ப்பை தேட முடியாது. விரும்பிய படிப்புகளை தேர்வு செய்து அதை படிக்கும் போதே பாடங்களையும் தாண்டி வேலைவாய்ப்பிற்கான கூடுதல் தகுதிகளை வளர்த்துக்கொள்ள வேண்டும். கல்லூரி படிப்புகளை தேர்வு செய்யும்போது பெற்றோரின் விருப்பத்தை பிள்ளைகளிடம் திணிக்க கூடாது. அவர்களின் தனித் திறன்களை கண்டறிந்து அதற்கேற்ற படிப்புக்களை தேர்வு செய்ய வேண்டும்.
நாம் சாதாரணமாக நினைக்கும் எறும்பு, காக்கா உட்பட கடவுள் படைத்த அனைத்து உயிரினங்களுக்கும் ஒவ்வொரு தனித்திறன்கள் உள்ளன. ஒவ்வொரு மாணவர்களுக்கும் ஏதாவது ஓர் திறமை இருக்கும். அதை கண்டறிவது பெற்றோர் பொறுப்பு. மாணவர்கள் ’பாசிட்டிவ்’ எண்ணங்களை வளர்த்துக்கொள்ள வேண்டும். ஆங்கில பேச்சுத் திறனை மேம்படுத்தி, படிக்கும்போதே சம்பாதிக்கும் முயற்சி மேற்கொண்டால் சிறந்த தொழில்முனைவோராக கூட ஜொலிக்கலாம் என்றார்.