பொருளியல் தேர்வில் தவறான கேள்விகளுக்கு மதிப்பெண் வழங்க முடிவு

’பிளஸ் 2 பொருளியல் தேர்வில், தவறாக கேட்கப்பட்ட இரு வினாக்களுக்கு, இரண்டு மதிப்பெண் வழங்கப்படும்’ என, உயர் நீதிமன்ற மதுரை கிளையில், தேர்வுத் துறை தெரிவித்துள்ளது.


தமிழ்நாடு முதுகலை பட்டதாரி ஆசிரியர் சங்க, மதுரை மாவட்ட தலைவர் சந்திரன், மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு:

கடந்த மார்ச் 27ம் தேதி, பிளஸ் 2 பொருளியல் தேர்வு நடந்தது. பிரிவு, ’ஏ’யில் (தமிழ் வழி), இரண்டு ஒரு மதிப்பெண் வினாக்கள் (எண்: 18, 20), பதிலளிக்க முடியாத வகையில், தவறாக கேட்கப்பட்டு உள்ளன. எனவே, பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு, கருணை மதிப்பெண் அளிக்க வேண்டும். இவ்வாறு, அதில் தெரிவித்திருந்தார்.

நீதிபதிகள் எஸ்.மணிக்குமார், ஜி.சொக்கலிங்கம் ஆகியோர் அடங்கிய, ’பெஞ்ச்’, நேற்று மனுவை விசாரித்தது.

அப்போது, அரசு வழக்கறிஞர் சண்முகநாதன், பிரிவு ’ஏ’யில் (தமிழ் வழி) வினாக்கள், 18, 20 ஆகியவை தவறாக இடம் பெற்றுள்ளன; இவ்வினாக்களுக்கு விடையளித்த மாணவர்களுக்கு, இரண்டு மதிப்பெண் வழங்கப்படும்’ என்றார். இதை பதிவு செய்த நீதிபதிகள், வழக்கை முடித்து வைத்தனர்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...