ஜாதி, மத, பேதமின்றி வசதியில்லாத மக்களுக்கு முடிந்தளவு உதவி செய்யவேண்டும். ஏழை எளிய மக்களுக்கு கண்டிப்பாக கல்வி அறிவு புகட்ட வேண்டும். ஏனெனில், ஏழை மக்களில் ஒரு மாணவன் படித்தால் அவனது சந்ததியே முன்னேறும்.
வசதி இல்லாதவர்களுக்கு உதவி செய்வதையே நோக்கமாக கொள்ள வேண்டும். அனைவரும் நகரத்திற்கு வருவதை விட்டுவிட்டு, கல்விநிறுவனங்களை துவங்குவது முதல் தங்களால் இயன்றவற்றை அவரவர் கிராமப் பகுதிகளில் செய்தாலே போதும் நாடு முன்னேறும். அனைவருக்கும் உயர்கல்வி அளிப்பது மிக முக்கியம். குறிப்பாக, ஒவ்வொரு ஆண்டும் உயர்கல்வி கற்க வரும் மாணவிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவது நாட்டின் வளர்ச்சியைக் காட்டுகிறது.
தனியார் பங்களிப்பு
கல்வி சேவையில் தனியாரின் பங்களிப்பு அத்தியாவசியமானது. தங்களது கல்வி நிறுவனத்தை வளர்ச்சி பெற செய்யவேண்டும் என்ற முனைப்பில், இரவு பகல் பாராமல் உழைப்பார்கள். நிர்வாகத்தில் அதிக கவனமுடன் செயல்படுவர். ஆனால், அரசு நிறுவனங்களில் அத்தகைய கடின உழைப்பை பார்ப்பது கடினம். தனியாரைப் பொறுத்தவரை, நேரம் பார்க்காமல் உழைப்பார்கள். அரசு நிறுவனம் அப்படியல்ல. பாரபட்சமின்றி, அனைவரும் நேரம் பார்க்காமல் உழைக்க வேண்டும்.
சேவை நோக்கத்தில் மட்டுமே கல்வி நிறுவனத்தை ஏற்படுத்த வேண்டும். குளத்தில் உள்ள மீன்கள், நீரில் கலந்துள்ள மாசுக்களை உணவாக உட்கொண்டு தானும் உயர்வாழ்ந்து, குளத்தையும் தூய்மையாக வைத்திருக்கிறது. அவ்வாறு தான், தனியாரும்.
உலகின் பல்வேறு பகுதிகளிலும், தமிழக மாணவர்கள் பணிபுரிகின்றனர். அதற்கு காரணம், பெரும்பாலான தனியார் கல்வி நிறுவனங்கள் மிகச் சிறந்த முறையில் செயல்படுவதே. தமிழகத்தில் 530க்கும் மேற்பட்ட தனியார் பொறியியல் கல்லூரிகள் உள்ளன. அரசு பொறியியல் கல்லூரிகளின் எண்ணிக்கை 10கூட இல்லை. இதன்மூலமே, தொழில்நுட்ப கல்வி வழங்குவதில் தனியார் பங்களிப்பை உணர முடியும்.
நன்கொடை கூடாது
எனினும், நம் நாட்டின் கல்வித் தரத்தில் மேலும் மாற்றங்கள் மேற்கொள்ள வேண்டியுள்ளது. நன்கொடை பெறாத கல்வி முறை தான் நம் நாட்டிற்கு வேண்டும். பிரபல மேலை நாடுகளில் முதுநிலைப் படிப்பை நிறைவுசெய்ய காலவரையறை இல்லை. வழங்கப்படும் பாடங்களை விரைவாக படித்து தேர்ச்சி பெற முடியும். இந்தியாவைப்போன்று குறைந்தபட்சம் 2 ஆண்டுகள் என்ற நிலை இல்லை.
நம் நாட்டிலும் கல்வி முறையை சர்வதேச தரத்திற்கு உயர்த்த வேண்டும். வளர்ந்த நாடுகளுடன் போட்டியிடும் வகையில் மாற்றங்கள் செய்ய வேண்டும். செயல்முறை பயிற்சிக்கு அதிக முக்கியத்துவம் அளிக்க வேண்டும்; புத்தகத்திற்கு அல்ல.
எனது வெற்றிக்கு காரணம் உழைப்பு மட்டுமே; 87 வயதிலும் உழைக்கிறேன். முன்னேற்றத்திற்கு தேவை உழைப்பு, உழைப்பு, உழைப்பு; அதிர்ஷ்டமல்ல.
-அல்ஹஜ் எஸ்.எம். முகம்மது யூசுப், சேர்மன், முகமது சதக் கல்வி குழுமங்கள்.