வாக்காளர் பட்டியல் செம்மைப்படுத்தும் பணியில் மாவட்டத்தில் இதுவரை 64.85 சதவீதத்தினர் ஆதார் எண் உள்ளிட்ட விவரங்களை சமர்பித்துள்ளனர். இதுவரை ஆதார் அட்டை பெறாதவர்கள், தங்களது மொபைல் எண் உள்ளிட்ட பிற விவரங்களை மட்டும் பதிவு செய்து கொள்ளலாம்.
வாக்காளர் பட்டியல் செம்மைப்படுத்தும் பணியை இந்திய தேர்தல் ஆணையம் கடந்த மார்ச் 3ம் தேதி முதல் மேற்கொண்டு வருகிறது. அதில், வாக்காளரின் ஆதார் அட்டை எண், மொபைல் எண், மின்னஞ்சல் முகவரி உள்ளிட்ட விபரங்களை வாக்காளர் அட்டையில் இணைத்து வருகிறது. அதன்படி கடலூர் மாவட்டத்தில் உள்ள 19 லட்சத்து 28 ஆயிரத்து 644 வாக்காளர்களின் ஆதார் எண் உள்ளிட்ட விவரங்களை அங்கன்வாடி ஊழியர்கள் வீடு< வீடாகச் சென்று சேகரித்து வருகின்றனர்.
மேலும், வாக்காளர்கள் நேரடியாக "ஆன்லைன்' மூலமும் தங்கள் ஆதார் எண் உள்ளிட்ட விவரங்களை பதிவேற்றம் செய்து வருகின்றன.
அதில், கடந்த 23ம் தேதி வரை 7 லட்சத்து 31 ஆயிரத்து 283 பேரிடம் விவரம் சேகரிக்கப்பட்டது. வாக்காளர் பட்டியல் செம்மைப்படுத்தும் பணியை விரைந்து முடித்திடும் பொருட்டு கடந்த 12ம் தேதி நடந்த சிறப்பு முகாமில் மாவட்டத்தில் உ<ள்ள 1,155 மையங்களில் 3 லட்சத்து 46 ஆயிரத்து 998 பேரும், 26ம் தேதி நடந்த இரண்டாம் கட்ட சிறப்பு முகாமில் ஒரு லட்சத்து 71 ஆயிரத்து 942 பேர் என மொத்தம் 5 லட்சத்து 18 ஆயிரத்து 940 பேர் ஆதார் எண் உள்ளிட்ட விவரங்களை சமர்பித்துள்ளனர்.
மாவட்டத்தில் உள்ள 19 லட்சத்து 28 ஆயிரத்து 644 வாக்காளர்களில் இதுவரை 12 லட்சத்து 50 ஆயிரத்து 223 வாக்காளர்கள் தங்களை குறித்த ஆவணங்களை சமர்பித்துள்ளனர். இது மொத்த வாக்காளர்களில் 64.85 சதவீதமாகும். வாக்காளர் பட்டியலில் பெயர் இடம் பெற்று இதுவரை ஆதார் எண் உள்ளிட்ட விவரங்களை சமர்பிக்காதவர்கள் வரும் மே 10 மற்றும் 24ம் தேதிகளில் நடைபெறும் சிறப்பு முகாம்களிலோ அல்லது தங்கள் வீடு தேடி வரும் அங்கன்வாடி ஊழியர்களிடமோ சமர்ப்பிக்கலாம். இதுவரை ஆதார் அட்டை பெறாதவர்கள், தங்களது மொபைல் எண், தொலைபேசி எண், மின்னஞ்சல் முகவரி இவற்றை மட்டுமாவது பதிவு செய்து கொள்ள வேண்டும். ஆதார் அட்டைக்கு புகைப்படம் எடுத்து அட்டை பெறாதவர்கள், புகைப்படம் எடுத்த போது கொடுத்த பதிவெண்ணை மட்டும் பதிவு செய்து கொள்ளலாம்.