''நாடு முழுவதும் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில், ஜெர்மன் மொழியை, விருப்ப படமாக்குவதற்கான ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது,'' என, மத்திய மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி கூறினார்.
மத்திய அமைச்சரும், பா.ஜ.,வைச் சேர்ந்தவருமான ஸ்மிருதி இரானி, லோக்சபாவில் கூறியதாவது: கே.வி., பள்ளிகளில் ஜெர்மன் மொழி, மூன்றாவது பாடமாக இருந்தது. இது தொடர்பாக, ஜெர்மனியில் உள்ள கல்வி நிறுவனத்துக்கும், நம் நாட்டில் உள்ள நிறுவனத்துக்கும் இடையே ஒப்பந்தம்
கையெழுத்தாகி இருந்தது.
இந்த ஒப்பந்தம், அரசின் மும்மொழி கொள்கைக்கு எதிராக இருந்ததால், ஜெர்மன் மொழிக்கு பதில், சமஸ்கிருதத்தை மூன்றாவது மொழியாக்குவதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், ஜெர்மன் - இந்திய அரசுகளுக்கு இடையே சமீபத்தில் முக்கிய ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது. இதன்படி, கே.வி., பள்ளிகளில், ஜெர்மன் மொழி, விருப்ப பாடமாக இருக்கும். நம் நாட்டு மாணவர்களுக்கு ஜெர்மன் மொழியை கற்றுத் தருவதற்காகவும், ஜெர்மனியில் உள்ள கல்வி நிறுவனங்களில் இந்திய மொழியை கற்றுத் தருவதற்காகவும் இந்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இவ்வாறு, அவர் கூறினார்.
SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!
நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...
-
More than 100 Keyboard Shortcuts: Keyboard Shorcuts (Microsoft Windows) 1. CTRL+C (Copy) 2. CTRL+X (Cut) ...... 3. CTRL+V (Paste) 4. ...
-
புதிதாக நியமனம் செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு,அரசு ஊழியர்களுக்கு CPS விண்ணப்பம். CLICK HERE TO DOWNLOAD CPS APPLICATION
-
இன்று SSTA சார்பில் தொடுத்த இடைநிலை ஆசிரியர்களுக்கு மத்திய அரசுக்கு இணையானஊதியம் வழங்க வேண்டும் என்ற வழக்கு எண் ;MD-4420/2014 (9300-4200) இ...