தமிழ்நாடு சத்துணவு மைய ஊழியர்கள் சங்கத்தினர் நடத்தி வரும் தொடர் வேலை நிறுத்த போராட்டம் நாளை(திங்கள் கிழமை) நீடிக்குமா? என்பது இன்று இரவிற்குள் தெரிய வரும் என்று கூறப்படுகிறது.
ஊதியம், பதவி, ஓய்வூதியம் உயர்வு, மதிய உணவு தயாரித்தல அலவன்ஸ் தொகை உயர்வு உள்ளிட்ட 34
கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு சத்துணவு மைய அமைப்பாளர்கள், சமையலர்கள், உதவியாளர்கள் உள்ளிட்ட ஊழியர்கள் சங்கத்தினர் பல்வேறு கட்ட போராட்டம் நடத்தினார்கள். தற்போது ஏப். 15 முதல் தமிழ்நாடு முழுவதும் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.தொடர் வேலை நிறுத்தம் சமயம், அந்தந்த மாவட்டத்தி்ல் ஆட்சியர் உத்தரவுப்படி, ஒவ்வொரு ஊராட்சி ஒன்றியத்திலும் ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(சத்துணவு திட்டம்) மேற்பார்வையில் ஆணையர்கள், ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள், பணியாளர்கள் உள்ளிட்டோர், ஊர்களுக்குச் சென்று, சத்துணவு மைய கதவு பூட்டுகளை அதிரடியாக உடைத்து திறந்து, சமையல் பொருள்களை வெளியே எடுத்து, தற்காலிக சமையலர்கள் நியமித்து, மதிய உணவு தயாரித்து, மாணவ, மாணவிகளுக்கு வழக்கம் போல் வழங்கச் செய்தனர்.
இந்த நிலை கடந்த வியாழன், வெள்ளி ஆகிய கிழமைகளில் நீடித்தது. நாளையும் அதிகாரிகள் இதே நடவடிக்கையை மேற்கொள்கின்றனர். சத்துணவு மைய ஊழியர்கள் கோரி்க்கைக்ளுக்கு தமிழக அரசு முக்கியத்துவம் தருவது போல் இல்லை என்று கூறப்படுகிறது. இவர்களை அரசு முறையாக அழைத்து பேச்சு வார்த்தை நடத்தும் சூழ்நிலையும் இல்லையாம். இது தவிர இவர்களுக்கு தி.மு.க. தலைவர் கருணாநிதி, ம.தி.மு.க. பொதுச்செயலர் வை.கோ, பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராம்தாஸ், தே.மு.தி.க. நிறுவனர் விஜயகாந்த் போன்றவர்கள் பலத்த ஆதரவு தந்து வருவதில் அ.தி.மு.க. அரசு மிகவும் அதிருப்தி அடைந்திருப்பதாகவும் கூறப்படுகிறது. இதன்காரணமாக சத்துணவு மைய ஊழியர்களை, சாலைப் பணியாளர்களைப் போல் டிஸ்மிஸ் செய்திடவும் அ.தி.மு.க .அரசு தயாராகி வருகிறது என்ற பலத்த வதந்தியும் நிலவுகிறது.
எனவே இத்கைய பலப்பரீட்சைகளில் சிக்கி, பெரும் பாதிப்புகளைச் சந்திப்பதை விட தொடர் வேலை நிறுத்த போராட்டத்தைக கைவிட்டு, நாளை முதல் வேலைக்குத் திரும்பி வடலாமா என்ற சிந்தனையிலும், குழப்பத்திலும் சத்துணவு மைய ஊழியர்கள் உள்ளனர் என்றும் கூறப்படுகிறது. இன்று இரவிற்குள் இறுதி முடிவு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்ப