சென்னையில் உள்ள தமிழக அறிவியல் மையத்தில், மாணவர்கள் மற்றும் குடும்பத்தினருக்கு, ஒரு நாள் அறிவியல் நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மைய செயல் இயக்குனர் அய்யம்பெருமாள் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மையத்தில், மே, 7ம் தேதி, 'அறிவியல் மையத்தில் ஒரு நாள்' என்ற நிகழ்ச்சி நடக்கிறது. காலை, 10:00 மணி முதல் மாலை, 5:00 மணி வரை நடக்கும் இந்நிகழ்ச்சியில், ஏழாம் வகுப்பு முதல், 10ம் வகுப்பு வரை, தற்போது முடித்துள்ள மாணவர்கள்,
தங்கள் பெற்றோருடன் பங்கேற்கலாம். மின்னணுவியல், வானவியல், உளவியல், காட்சிப் பொருள் தயாரிப்பு எனப் பல வகை செயல்முறை வகுப்புகளும், புகழ் பெற்ற அறிவியலாளர்களின் சொற்பொழிவும் நடைபெறும். மாணவர்கள் மற்றும் குடும்பத்தினருக்கு, மதிய உணவு வழங்கப்படும்; பதிவுக் கட்டணம் இல்லை. விருப்பமுள்ளவர்கள், tnstc@md5.vsnl.net.in என்ற மின்னஞ்சல் அல்லது 044-24410025 என்ற தொலைபேசி மூலம் தொடர்பு கொள்ளலாம். முதலில் வரும், 50 குடும்பங்கள் மட்டும் நிகழ்ச்சியில் அனுமதிக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!
நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...
-
More than 100 Keyboard Shortcuts: Keyboard Shorcuts (Microsoft Windows) 1. CTRL+C (Copy) 2. CTRL+X (Cut) ...... 3. CTRL+V (Paste) 4. ...
-
புதிதாக நியமனம் செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு,அரசு ஊழியர்களுக்கு CPS விண்ணப்பம். CLICK HERE TO DOWNLOAD CPS APPLICATION
-
இன்று SSTA சார்பில் தொடுத்த இடைநிலை ஆசிரியர்களுக்கு மத்திய அரசுக்கு இணையானஊதியம் வழங்க வேண்டும் என்ற வழக்கு எண் ;MD-4420/2014 (9300-4200) இ...