மதுரை காமராஜ் பல்கலை துணைவேந்தர் பதவிகாலம் முடிந்த நிலையில் உயர்கல்வித் துறை செயலர் தலைமையில் கன்வீனர் கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது.
துணைவேந்தராக இருந்த
கல்யாணியின் பதவிகாலம் முடிவுற்றது. அவரை பதிவாளர் ராஜசேகர், சிண்டிகேட், செனட் மற்றும் கல்விப் பேரவை உறுப்பினர்கள் மற்றும் பேராசிரியர்கள் வழியனுப்பி வைத்தனர். இப்பல்கலைக்கு புதிய துணைவேந்தரை, தேர்வுக் குழு தேர்வுசெய்யும் வரை முக்கிய முடிவுகள் மேற்கொள்ள கன்வீனர் கமிட்டி அமைக்கப்படும்.
இதன்படி உயர்கல்வித் துறை செயலர் அபூர்வா தலைமையில் பல்கலை சிண்டிகேட் உறுப்பினர்கள் விஜயரங்கன் (சமூக அறிவியல் புலத் தலைவர்), ராமகிருஷ்ணன் (தகவல் தொழில்நுட்ப புலத் தலைவர்) ஆகியோர் கொண்ட கன்வீனர் கமிட்டி அமைக்கப்பட்டது. இன்றுமுதல் இக்கமிட்டி செயல்படும்.