தொலைபேசியில் இரவு நேர அழைப்புகள் இலவசம்

பி.எஸ்.என்.எல். தொலைபேசி மூலம் நாடு முழுவதிலுமுள்ள அனைத்துத் தொலைபேசி, செல்லிடப்பேசிகளுக்கும் இரவு நேரத்தில் இலவசமாகத் தொடர்பு கொண்டு பேசும் வசதியை அந்த நிறுவனம், வரும் மே 1ஆம் தேதி முதல் வழங்க உள்ளது.


இந்தத் திட்டத்தின்படி பி.எஸ்.என்.எல். நிறுவன தொலைபேசியிலிருந்து இரவு 9 மணியிலிருந்து காலை 7 மணி வரை மேற்கொள்ளப்படும் அழைப்புகள் இலவச அழைப்பாகக் கருதப்படும்.

இதுகுறித்து பி.எஸ்.என்.எல். நிறுவனம் வியாழக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

எங்களது தரைவழித் தொலைபேசி (லேண்ட் லைன்) மூலம், நாடு முழுவதும் உள்ள அனைத்து நிறுவன செல்லிடப்பேசி, தொலைபேசிகளுக்கு மேற்கொள்ளும் இரவு நேர அழைப்புகளை, மே 1ஆம் தேதியிலிருந்து இலவச அழைப்பு சேவையாக வழங்க உள்ளோம்.

கிராமம் மற்றும் நகர்ப்புறத் திட்டங்கள், சிறப்புத் திட்டங்கள், இணையத்துடன் கூடிய திட்டங்கள் என அனைத்து வகையான தொலைபேசி இணைப்புத் திட்டங்களுக்கும் இந்த இலவசச் சலுகை பொருந்தும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...