பதவி உயர்வு வழங்கியபோது நிர்ணயிக்கப்பட்ட ஊதியத் தொகையை அடுத்த விசாரணை தேதிக்குள் முழுமையாக வழங்க வேண்டும் என, பொது சுகாதாரத் துறை இயக்குநருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி வட்டத்தைச் சேர்ந்த கே.சரோஜம்மா கடந்த 1971-ஆம் ஆண்டு மார்ச் மாதம் சுகாதாரப் பார்வையாளராக நியமிக்கப்பட்டார். 10-ஆண்டுகளுக்குப் பிறகு, 1989-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் சமுதாய சுகாதார உறுப்பினராக அவருக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டது. இவருக்கான அடிப்படை ஊதியம் உள்பட அனைத்து பலன்களும் நிர்ணயிக்கப்பட்டன.
இந்த நிலையில், சுகாதாரத் துறையின் துணை இயக்குநர் டாக்டர் ஏ.சோமசுந்தரம், சரோஜம்மாவின் ஊதியத்தை திருத்தியமைத்து 2004-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் உத்தரவிட்டார். மேலும், திருத்தியமைக்கப்பட்ட ஊதியத்தைவிட அதிகமாக வழங்கப்பட்ட தொகையை திரும்பப் பெறவும் உத்தரவிட்டார்.
இதை எதிர்த்து மாநில பணியாளர்கள் தீர்ப்பாயத்தில் சரோஜம்மா வழக்கு தொடர்ந்தார். தீர்ப்பாயம் துணை இயக்குநரின் உத்தரவுக்கு தடை விதித்தது. தடைக்குப் பிறகும் மற்றொரு அறிவிப்பாணை வெளியிட்டு, அதிகமாக வழங்கப்பட்ட ஊதியத்தை திரும்பப் பெற துணை இயக்குநர் உத்தரவிட்டார்.
இதை எதிர்த்து சரோஜம்மா உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவை விசாரணை செய்த தனி நீதிபதி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்யக் கோரி, சரோஜம்மா உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்தார். அந்த மனுவை விசாரணை செய்த உயர் நீதிமன்றம் தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்து, 1989-ஆம் ஆண்டு நிர்ணயிக்கப்பட்ட ஊதியத்தை நிலுவையுடன் சரோஜம்மாவுக்கு வழங்க 2011-ஆம் ஆண்டு உத்தரவிட்டது.
இந்த நிலையில், நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை நிறைவேற்றாத பொது சுகாதாரத் துறை இயக்குநர், துணை இயக்குநர் மீது நீதிமன்ற அவமதிப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கவும், நீதிமன்றம் வழங்க உத்தரவிட்ட தொகை முழுவதையும் வழங்க உத்தரவிடக் கோரியும் சரோஜம்மா நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார்.
இந்த அவமதிப்பு வழக்கு தலைமை நீதிபதி எஸ்.கே.கெளல், நீதிபதி டி.எஸ்.சிவஞானம் ஆகியோர் அடங்கிய முதன்மை அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. விசாரணைக்குப் பிறகு நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: விசாரணையின் போது மனுதாரரின் ஊதியத்தை திருத்தியமைத்த குழு உறுப்பினர்கள் ஆஜராகியிருந்தனர். ஆனால், எதன் அடிப்படையில் மனுதாரரின் ஊதியம் மாற்றியமைக்கப்பட்டது, எவ்வாறு கணக்கிடப்பட்டது என்று கேட்டால் அவர்களுக்குத் தெரியவில்லை.
மேலும், மனுதாரருக்கு நிர்ணயிக்கப்பட்ட ஊதியத் தொகையை வழங்க கடந்த 2011-ஆம் ஆண்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நீதிமன்றம் உத்தரவிட்டு நான்கு ஆண்டுகள் கடந்த zபிறகும் மனுதாரருக்கு அவரது பணப் பலன்கள் சென்றடையவில்லை.
எனவே, மனுதாரருக்குச் செலுத்த வேண்டிய முழுத் தொகையை வட்டியுடன் அடுத்த விசாரணைத் தேதிக்குள் பொது சுகாதாரத் துறை இயக்குநர் வழங்க வேண்டும். அவ்வாறு வழங்கும் தொகை எவ்வாறு கணக்கிடப்பட்டது என்பதை அவருக்கும், நீதிமன்றத்துக்கும் தாக்கல் செய்ய வேண்டும்.
அவ்வாறு செலுத்தத் தவறினால் பொது சுகாதாரத் துறை இயக்குநர், துணை இயக்குநர் இருவரும் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டு ஜூலை 16-ஆம் தேதிக்கு வழக்கை நீதிபதிகள் ஒத்தி வைத்தனர்.