சமூக வலைத்தளங்களில் சொந்த கருத்துக்களை அளவோடு பயன்படுத்த வேண்டும் !

தளத்தில் சொந்தக் கருத்துகளை அளவோடு பயன்படுத்த வேண்டும் என இணையதள பாதுகாப்பு நிபுணர்கள் வலியுறுத்தினர்.

சென்னை பல்கலைகழக வளாகத்தில்,
டிஜிட்டல் ஆய்வுத் துறை சிறப்பு மையம், ஆசிய குற்றவியல் அமைப்பு, இந்திய குற்றவியல் நிறுவனம், சென்னை பல்கலைக்கழக குற்றவியல் துறை உள்ளிட்டோர் ஏற்பாடு செய்திருந்த இணையதள தடயவியல் கருத்தரங்கை ஆளுநர் கே.ரோசய்யா வெள்ளிக்கிழமை தொடக்கி வைத்தார்.

பின்னர் தகவல், குற்றவியல், சமூக ஆர்வலர், தடயவியல் ஆய்வாளர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டு இணைய தள பயன்பாடு, பாதுகாப்பு குறித்து பேசினர்.

நிகழ்ச்சியில் இணையதள பாதுகாப்பு நிபுணர்கள் பேசியதாவது:

இன்றைய நவீன உலகில் இணையதளத்தை பயன்படுத்துவது நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. வளர்ந்து வரும் தொழில்நுட்பத்திற்கேற்றவாறு பயன்பாடுகளும் புதிய வடிவம் பெற்று வருகின்றது. இந்தப் பயன்பாடுகளை முழுமையாக தெரிந்துகொள்ளமாலே அவற்றை நாம் பயன்படுத்தி வருகிறோம். மின்னஞ்சல் முகவரிகள், சமூக வலைதள முகப்புகள், முகநூல், கட்செவி அஞ்சல், சுட்டுரை உள்ளிட்ட இணையதளத்தை பயன்படுத்தவதில் இந்தியா முன்னணி நாடாக உள்ளது. ஆனால், சமூக வலைதளத்தில் பாதுகாப்பு, பயன்பாட்டு சேவைகளை கவனத்துடன் கையாள வேண்டும்.

இணையதளத்தை எந்த அளவிற்கு பயன்படுத்தி வருகிறோமோ அந்த அளவிற்கு ஆபத்தும் நிறைந்துள்ளது. சொந்தக் கருத்துகள், குடும்ப படங்கள் ஆகியவைகளை இணையதளத்தில் பயன்படுத்தக் கூடாது. சொந்தத் தகவல்களை மூன்றாவது நபர்களுக்கு தெரிவிப்பதால் இணையதள குற்றங்களுக்கு அதுவே ஆதாரமாக மாறுகின்றது.

இதே போன்று சிறப்பு செல்லிடப்பேசி வகைகளை பயன்படுத்தும்போது தேவையில்லாத பயன்பாட்டினை முடக்கி வைக்க வேண்டும் அல்லது அழித்துவிட வேண்டும். இணையதளத்தில் ரகசிய குறியீட்டு எண்களை அடிக்கடி மாற்றி வைக்க வேண்டும்.

இணைதள குற்றங்கள்: வங்கி மோசடி, ஆதாரங்களை திருடுதல், மிரட்டல், பாலியல் குற்றங்கள், உளவு பார்த்தல், அலுவலக ஆவணங்களை கண்காணித்தல், ராணுவ ரகசியங்களை தெரிந்துகொள்ளுதல் உள்ளிட்ட ஏராளமான குற்றங்கள் இணையதளத்தில் நடந்து வருகின்றன. இந்தக் குற்றப்பின்னணிகளை கண்டறிய உலக நாடுகளிடையே ஒருமித்த நிலைப்பாடு இல்லாததும் இதற்கு காரணமாக உள்ளது. மேலும், குற்றவாளிகளை கண்டறியவும், குற்றம் குறித்து நிரூபிக்கவும் காவல் துறை, நீதித் துறைக்கும் சவாலாகவே உள்ளது.

உளவியல் பாதிப்பு: இன்றைய தலைமுறையினர் 2 வயதில் இருந்தே இணையதளத்தை கையாளுகின்றனர். இதனால், மாணவர்கள் பாலியல் தொடர்பான இணையதள முகவரிக்கு செல்ல நேரிடுகிறது. மேலும், கணினி விளையாட்டுகள், சமூக வலைதளங்களில் அதிகம் நேரம் செலவிடுவதால் உளவியல் ரீதியாக பாதிப்புகள் ஏற்படுவதாக ஆய்வறிக்கைகள் தெரிவிக்கின்றன.

விழிப்புணர்வு தேவை: இணையதளத்தை ஆய்வு செய்வது, பாதுகாப்பு முறையை கையாளுவது, சட்டபூர்வ அணுகுமுறை, இணையதள முகப்புகளை நெறிமுறைப்படுத்துதல் உள்ளிட்ட விஷயங்களை குறித்து விழிப்புணர்வு பயிற்சி அளிப்பதன் மூலம் இணையதள குற்றங்களை தடுக்க முடியும் என்றனர்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...