அகற்றுங்கள் அறியாமையை...

மோகம் வேண்டாமே

தரமான மாணவர்களுக்கு சிறந்த வேலை வாய்ப்பு என்பது அனைத்து துறையிலும் என்றுமே உண்டு. இதற்கு மாணவர்களின் திறமையையும் கடந்து, அனுபவமிக்க ஆசிரியர்கள் மற்றும் சிறந்த உள்கட்டமைப்பு வசதிகள் இடம்பெற்றுள்ள தரமான கல்லூரிகள்
போன்றவை முக்கிய காரணங்களாக அமைகின்றன. அதையும்விட, அந்த துறையில் உண்மையான ஆர்வம் இருந்தால் கண்டிப்பாக சாதிக்க முடியும் என்பதை யாராலும் மறுக்கமுடியாது.

ஆனால், ஆர்வமின்றி வெறும் மோகத்தால் ஒரு படிப்பை தேர்வு செய்வது புத்திசாலித்தனம் இல்லை. அவ்வாறு முன் யோசனையின்று ஒரு படிப்பில் சேர்ந்த பிறகு படிப்பை தொடரவும் முடியாமல், நிறைவு செய்யவும் முடியாமல் தவிக்கும் மாணவர்களையும் இன்று குறிப்பிட்ட அளவில் காண முடிகிறது.

வேலை தயார்

பாடங்களை படித்து, சிறப்பாக தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றாலும் பெரும்பாலனோருக்கு வேலைக்கான திறன் இல்லை என்பது தொழில் நிறுவனங்களின் குற்றச்சாட்டு. இதையே உறுபடுத்தும் விதமாக, ‘தமிழகத்தில் 20 சதவீதம் பட்டதாரிகள் கூட சரியான வேலைத் திறன் பெறவில்லை’ என்கிறது ஆய்வு முடிவு.

சிறந்த கல்லூரிகளில் அனைத்து மாணவர்களாலும் இடம் பெற முடியாது என்பது நடைமுறை. அதேபோல், பட்டம் பெற்ற அனைவருக்கும் பெரிய நிறுவனங்களில், உயர் சம்பளத்தில் வேலை கிடைப்பதும் சாத்தியமில்லை. அதேசமயம், திறமையான மாணவர்கள் வேலை வாய்ப்பை பற்றி அஞ்சவும் தேவையும் இல்லை. அவர்களுக்கு வேலை எப்போதும் காத்துக்கொண்டிக்கிறது. தகுதியுள்ளவர்களுக்கு கோடி ரூபாய் சம்பளம் கொடுக்கவும் இன்றும் நிறுவனங்கள் தயாராக உள்ளன.

மாயையில் சிக்காதீர்

ஆனால், மாயையில் சிக்கிய பல மாணவர்கள் ஏதோ ஒரு படிப்பு, ஏதோ ஒரு கல்லூரி என சேர்கின்றனர். அதன்பிறகும், படிப்பில் உரிய கவனம் செலுத்தாமல், போதிய வேலைவாய்ப்பு திறன்களையும் வளர்த்துக்கொள்ளாமல் கல்லூரியை விட்டு வெளியேறும் போதுதான் அவர்கள் உலக நடப்பையும், உண்மையையும் உணருகின்றனர்.

எந்த படிப்பாக இருந்தாலும் அறியாமையில் தேர்வு செய்யாதீர்கள். உங்களின் ஆர்வம், பாடத்திட்டம், வேலைவாய்ப்பு, உலக சந்தையில் அத்துறையின் நிலை, எதிர்கால வாய்ப்புகள், படிப்பிற்கு பிறகான உங்களது திட்டம் போன்றவற்றை கருத்தில்கொண்டு உங்களுக்கான துறையை தேர்வு செய்யுங்கள்.

அந்த துறையில் உரிய அறிவையும், திறனையும் வளர்த்துக்கொள்வது இன்றியமையாதது என்ற உண்மையையும் உணர்ந்து செயல்படுங்கள். வாழ்க்கை பிரகாசமாகும்!

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...