முறைகேட்டில் ஈடுபட்ட அண்ணாமலைப் பல்கலைக்கழக முன்னாள் பதிவாளர் இடைநீக்கம்

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக முன்னாள் பதிவாளர் ஆர்.மீனாட்சிசுந்தரம் பணிஓய்வு பெறுவதற்கு ஒருநாள் முன்பு பணிஇடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் நிதிநெருக்கடி மற்றும் நிதிமுறைகேடு
காரணமாக பல்கலைக்கழக ஆசிரியர், ஊழியர் கூட்டமைப்பினர் பல்வேறு போராட்டங்களை நடத்தினர். பல்கலைக்கழக ஆசிரியர்-ஊழியர் கூட்டமைப்பு போராட்டம் விளைவாக தமிழகஅரசு 2 குழுக்களை அனுப்பி விசாரணை மேற்கொண்டு அக்குழு 11 பிரிவுகளின் கீழ் முறைகேடுகள் நடந்துள்ளதாக அரசுக்கு அறிக்கை சமர்பித்தது. இந்நிலையில் பல்கலைக்கழக நிர்வாகியாக ஷிவ்தாஸ்மீனாவை கடந்த 2013-ம் ஆண்டு ஏப்.4-ம் தேதி தமிழகஅரசு நியமனம் செய்து, அவர் உடனடியாக பொறுப்பேற்றார்.

பின்னர் தமிழகஅரசு உயர்கல்வித்துறை மூலம் தமிழக சட்டப்பேரவையில் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தை அரசு கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வர சட்ட திருத்த மசோதா கொண்டு வரப்பட்டுள்ளது. இதனையடுத்து பல்கலைக்கழகத்தில் தமிழகஅரசால் நியமிக்கப்பட்டுள்ள நிர்வாகி ஷிவ்தாஸ்மீனாவால் பல்வேறு சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது.

பல்கலைக்கழக நிதிமுறைகேடுகள் குறித்து தமிழகஅரசு லஞ்சஒழிப்புத்துறை மற்றும் விஜிலென்ஸ் போலீஸ் விசாரணையும், ராஜா முத்தையா பல்மருத்துவக்கல்லூரி அனுமதி சேர்க்கையில் முறைகேடுகள் குறித்து சிபிஐ விசாரணையும் நடைபெற்று வருகிறது. விசாரணை வளையத்தில் உள்ள அப்போதிருந்த பதிவாளர் ஆர்.மீனாட்சிசுந்தரம் வியாழக்கிழமை அன்று பணி ஒய்வுபெறுகிறார்.

இந்நிலையில் தமிழகஅரசு உயர்கல்வித்துறை செயலர் விசாரணை நிலுவையில் உள்ளதால், அவரை பணிஇடைநீக்கம் செய்யுமாறு உத்தரவு பிறப்பித்துள்ளது. இதனையடுத்து பணிஓய்வுபெறும் ஒருநாள் முன்பு முன்னாள் பதிவாளர் ஆர்.மீனாட்சிசுந்தரத்தை, தற்போதைய பதிவாளர் ஜே.வசந்தகுமார் பணிஇடைநீக்கம் செய்து புதன்கிழமை ஆணை பிறப்பித்துள்ளார்.  

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...