கல்வி உதவி தொகையை காலம் தாழ்த்தாமல் வழங்க வேண்டும்

சமுதாயத்தின் நலிந்த பிரிவினருக்கு வழங்கப்பட்டு வரும் உதவிகள் முறைப்படுத்தப்பட்டு சீராகவும், முறையாகவும், விரைவாகவும் வழங்கப்பட வேண்டும் என்று

தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர்
ஜி.கே.வாசன் கேட்டுக் கொண்டுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

“முதியோர், மாற்றுத் திறனாளிகள் மற்றும் கணவனை இழந்தோர் ஆகிய சமுதாயத்தின் நலிந்த பிரிவினருக்கு வழங்கப்பட்டு வரும் உதவிகள் முறைப்படுத்தப்பட்டு, சீராகவும், முறையாகவும், விரைவாகவும் வழங்கப்பட வேண்டும்; தாமதம் தவிர்க்கப்பட வேண்டும்; தகுதியானவர்கள் அனைவரும் உதவிகள் பெறுவது உறுதி செய்யப்பட வேண்டும்’’ என்று பொருளாதார நிபுணர் தலைமையிலான சிறப்புக்குழு ஏற்கனவே 2013 ஆம் ஆண்டில் பரிந்துரை செய்துள்ளது. அப்பரிந்துரைகளை சமூகநீதி மற்றும் அதிகாரம் அளித்தல் அமைச்சகம் இன்னும் செயல்படுத்தப்படாமல் இருப்பதால், மேல் குறிப்பிட்ட நலிந்த சமுதாயப் பிரிவினருக்கு உரிய உதவிகள் காலத்தில் கிடைப்பதில்லை.

அதே போல் மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் திட்டங்களுக்காக 2014–2015 ஆம் ஆண்டில் ஒதுக்கிய நிதி ரூபாய் 21,000 கோடி; ஆனால் 2015-2016 ஆம் ஆண்டுக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிதி ரூபாய் 10,286 கோடி. இவ்வாறு மகளிர் மற்றும் குழந்தைகள் நலனுக்காக நிதி ஒதுக்கீடு 59 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது. ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்டத்திற்கு 2014-15 ல் ஒதுக்கப்பட்ட நிதி ரூபாய் 18,195 கோடி; 2015–16 ல் ஒதுக்கப்பட்ட நிதி ரூபாய் 8,338 கோடி மட்டுமே. வளர் இளம் பெண்கள் நலத் திட்டங்களுக்குத் தேவையான நிதி ரூபாய் 700 கோடி என்று அமைச்சகம் கேட்கிறது. ஆனால் ஒதுக்கப்பட்ட நிதியோ ரூபாய் 75.50 கோடி மட்டுமே. கடந்த 2014-15 ஆம் நிதி ஆண்டில் இத்திட்டத்திற்கு ஒதுக்கப்பட்ட நிதி ரூபாய் 630 கோடி. இவ்வாறு வளர் இளம் பெண்கள் நலத் திட்டத்திற்கான ஒதுக்கீடும் குறைக்கப்பட்டுள்ளது.

மேலும் கல்வி உதவித் தொகை கிடைக்கும் என்ற நம்பிக்கையில் தான் பெரும்பாலான ஏழைக் குழந்தைகள் பள்ளிகளில் சேர்கிறார்கள். கல்லூரியில் படிக்கும் மாணவர்களுக்கும் உரிய காலத்தில் கல்வி உதவித்தொகை கிடைத்தால் தான் அவர்கள் படிப்பை தொடர முடியும் நிலையும் உள்ளது. பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவியருக்கு வழங்கப்பட்டு வரும் கல்வி உதவித்தொகை மற்றும் ஊக்கத் தொகைகளை காலம் தாழ்த்தாமல் உரிய காலத்தில் வழங்கினால் தான் ஏழை மற்றும் ஆதிதிராவிடர், இதர பிற்பட்ட, சிறுபான்மை சமுதாய மாணவ, மாணவியர் பயனடைவார்கள்.

எனவே மத்திய அரசு மகளிர், குழந்தைகள், வளர் இளம் பெண்கள், முதியோர், மாற்றுத்திறனாளிகள், கணவனை இழந்தோர் ஆகிய பல்வகை நலிந்த பிரிவினரின் நலத்திட்ட ஒதுக்கீடுகளைக் குறைக்காமல், அத்திட்டங்களை முறையாகச் செயல்படுத்த வேண்டும். எனவே நலிந்தோர் நலன் காக்க மத்திய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...