சொத்து கணக்கு விபரம் : அதிகாரிகளுக்கு அரசு கெடு

மத்திய அரசு ஊழியர்கள் தங்களின் சொத்து கணக்கு விபரங்களை தாக்கல் செய்ய காலக்கெடுவை மத்திய அரசு அறிவித்துள்ளது.இது குறித்து மத்தியபணியாளர் நலன் பயிற்சிகள் துறை அமைச்சகம் அரசின் பல்வேறு துறைகளுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: மத்திய அரசு
ஊழியர்கள், அதி்காரிகள் தங்கள் கையிருப்பு , வங்கியிருப்பு , பத்திரங்கள்,கடன்பத்திரங்கள், பங்குகள், முதலீடுகள் ஆகியவை குறித்து விரைவில தாக்கல் செய்ய வேண்டும். கடந்த 2014-ம் ஆண்டு மார்ச் 30-ம் தேதிக்குள் தாக்கல் செய்யாத ஊழியர்கள் வரும் ஜூலை 31-ம் தேதிக்குள்ளும், 2015-ம் ஆண்டிற்கான கணக்குகளை வரும் அக்டோபர் மாதம் 15-ம் தேதிக்குள்ளும் தாக்கல் செய்ய வேண்டும். தவறும் பட்சத்தில் லோக்பால் சட்டப்படி அவை ஊழலில் சேர்த்த சொத்தாக கருதப்படு்ம் என தெரிவித்துள்ளது.ஐ.ஏ.எஸ். ஐ.பி.எஸ்.ஐ.எப்.எஸ் அதிகாரிகள் தங்களின் சொத்து கணக்கை தாக்கல் செய்வது குறித்த கடிதங்கள் மாநில தலைமைச்செயலாளர்களுக்கு கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...