கடந்த சில மாதங்களாகவே மாணவர்களை மணமகனாக மாற்றும் ஆசிரியைகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. நெல்லை மாவட்டம் செங்கோட்டையை சேர்ந்த ஆசிரியை கோதைலட்சுமி தனது வகுப்பில் படித்த மாணவருடன் ஓடினார். இந்த சம்பவம்
நடந்து பல நாட்களாகியும் அவர்கள் இன்னும் பிடிபடவில்லை.திண்டுக்கல் மாவட்டம் முத்தழகுபட்டியை சேர்ந்த தேவராஜ் மகள் செபாஸ்டின் சாரதி (21) என்பவர் டூடோரியல் கல்லூரி ஒன்றில் பேராசிரியையாக பணிபுரிந்தார். இங்கு, பிளஸ்-2 வகுப்பில் தோல்வி அடைந்த பாடங்களை படிப்பதற்காக சதீஷ்குமார் (18) என்ற மாணவர் இருந்தார். அவருடன் செபாஸ்டின்சாரதிக்கு காதல் ஏற்பட்டு இருவரும் ஓடினா். இதுதொடர்பான புகாரின்பேரில், போலீசார் இவர்களை கண்டுபிடித்து கோர்ட்டில் ஒப்படைத்தனர்.
ஆனால், இருவரும் மேஜா் என்பதால் அவர்கள் விருப்பப்படி வாழ கோர்ட் அனுமதித்தது. இந்த பரபரப்பு அடங்குவதற்குள் பேராசிரியை ரம்யாவும், மாணவன் சதீஷ்குமாரும் காதலித்து திருமணம் செய்துள்ளனர். மாணவர்களுக்கு கல்வியை போதிக்கும் ஆசிரியைகளே மாணவர்களுடன் காதல் என்னும் கலாசாரத்தை உருவாக்குவது, தமிழகத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.