ஜூன் 15ல் பிளஸ் 2 மறுமதிப்பீடு, மறுகூட்டல் முடிவுகள் வெளியீடு!

கடந்த மார்ச் மாதம், பிளஸ் 2 பொதுத் தேர்வு எழுதிய மொத்த மாணவர்களின் எண்ணிக்கை 8,82,260.  இதில் மறுகூட்டல் மற்றும் விடைத்தாள் நகல்கோரி விண்ணப்பித்தவர்கள் 1,00,566.


இவற்றில் மறுகூட்டலுக்கு விண்ணப்பித்தவர்கள் 2,835, மறுமதிப்பீடு கோரி விண்ணப்பித்தவர்கள் 3,502 ஆக மொத்தம் 6,337. இதில் மதிப்பெண் மறுகூட்டலில் மாற்றம் உள்ள தேர்வர்களின் எண்ணிக்கை 696.  மறுமதிப்பீட்டில் மாற்றம் உள்ள தேர்வர்களின் எண்ணிக்கை 2,782.  ஆக மொத்தம் 3,478.

மதிப்பெண் மாற்றம் உள்ள தேர்வர்களது பதிவெண்கள் பட்டியல் scan.tndge.in என்ற இணையதளத்தில் 15.06.2015 அன்று மாலை 4.00 மணிக்கு வெளியிடப்படும்.  இப்பட்டியலில் இல்லாத பதிவெண்களுக்கான விடைத்தாள்களில் எவ்வித மதிப்பெண் மாற்றமும் இல்லை என தெரிவிக்கப்படுகிறது.

மதிப்பெண் மாற்றம் உள்ளதேர்வர்கள் ஜூன் 16ம் தேதி காலை 10.00 மணி முதல் http://www.dge.tn.nic.in என்ற இணையதளத்தில் தங்களது பதிவெண் மற்றும் பிறந்த தேதி ஆகிய விவரங்களை தெரிவித்து தங்களுக்கான திருத்தப்பட்ட மதிப்பெண்கள் அடங்கிய தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்துக் கொள்ளலாம். இவ்வாறு தெரிவிக்கப்படுகிறது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...