எம்.பி.பி.எஸ். தரவரிசைப் பட்டியல்: 17 மாணவர்கள் 200-க்கு 200

தமிழகத்தில் எம்.பி.பி.எஸ். தரவரிசைப் பட்டியலில் மொத்தம் 17 மாணவர்கள் 200-க்கு 200 கட்-ஆஃப் மதிப்பெண் எடுத்து சிறப்பிடம் பெற்றுள்ளனர்.
 சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்வி இயக்குநர் அலுவலக அரங்கில் 2015-16 கல்வி ஆண்டுக்கான எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ். படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியலை சுகாதாரத் துறை
அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர் திங்கள்கிழமை வெளியிட, சுகாதாரத் துறைச் செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன் பெற்றுக் கொண்டார்.
 அதன் பிறகு மருத்துவக் கல்வி இயக்குநர் டாக்டர் எஸ்.கீதாலட்சுமி, மருத்துவக் கல்வி தேர்வுக் குழு செயலர் டாக்டர் உஷா சதாசிவம் ஆகியோர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
 தமிழகத்தில் நிகழ் கல்வி ஆண்டில் (2015-16) எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ். படிப்புகளில் சேர மொத்தம் 32,184 விண்ணப்பித்தனர். இவற்றில் தகுதியான விண்ணப்பங்களின் எண்ணிக்கை 31,525; இவர்களில் மாணவர்களின் எண்ணிக்கை 11,359; மாணவிகளின் எண்ணிக்கை 20,166.
 சிறப்பிடம் பெற்றவர்கள்: தரவரிசைப் பட்டிலில் 200-க்கு 200 மதிப்பெண் பெற்று சிறப்பிடம் பெற்ற 17 மாணவர்களின் விவரம்:
 1. கே.நிஷாத்ராஜன் (ஸ்ரீவித்யா மந்திர் பள்ளி, ஊத்தங்கரை, கிருஷ்ணகிரி); 2. எம்.முகேஷ் கண்ணன் (எஸ்ஆர்வி மெட்ரிகுலேஷன் பள்ளி, சமயபுரம், திருச்சி); 3. ஆர்.பிரவீண் (எஸ்கேவி மெட்ரிகுலேஷன் பள்ளி, எம்.கண்டம்பாளையம், நாமக்கல்); 4. ஜி.நிவாஷ் (மலர் மெட்ரிகுலேஷன் பள்ளி, பரமத்தி, நாமக்கல்); 5. எஸ்.சரவணகுமார் (கிரீன்பார்க் மெட்ரிகுலேஷன் பள்ளி, போதுப்பட்டி, நாமக்கல்); 6. டி.கௌதமராஜு (கிரீன்பார்க், நாமக்கல்); 7. வி.மோதிஸ்ரீ (கிரீன்பார்க் மகளிர் மெட்ரிகுலேஷன் பள்ளி, போதுப்பட்டி, நாமக்கல்); 8. ஜே.எம்.திராவிடன் (ஸ்ரீ கிருஷ்ணா மெட்ரிகுலேஷன் பள்ளி, ஒட்டன்சத்திரம்); 9. பி.பிரவீண்குமார் (கிரீன்பார்க், நாமக்கல்); 10. எம்.முகமது பைஸ் (வித்யா விகாஸ் மெட்ரிகுலேஷன் பள்ளி, திருச்செங்கோடு, நாமக்கல்); 11. எம்.சரண்ராம் (எஸ்எஸ்எம் லக்ஷ்மியம்மாள் மெட்ரிகுலேஷன் பள்ளி, குமாரபாளையம், நாமக்கல்), 12. ஆர்.ரேணுகா (அந்தியூர் ஆதர்ஷ் வித்யாலயா மேல்நிலைப் பள்ளி, ஈரோடு); 13 பி.மோனிஷ் (அந்தியூர் ஆதர்ஷ் வித்யாலயா, ஈரோடு); 14. ஜி.கார்த்திக் (ஸ்பிக் நகர் மேல்நிலைப் பள்ளி, தூத்துக்குடி); 15. எம்.மோகன்குமார் (அந்தியூர் ஆதர்ஷ் வித்யாலயா, ஈரோடு); 16. தேனியைச் சேர்ந்த மாணவி ஏ.நதாஷா (எஃப்எம்ஜி. மேல்நிலைப் பள்ளி, கூம்பம்பரா, அடிமலி அஞ்சல், கேரளம்); 17. இ.அஜித்குமார் (சௌதாம்பிகா மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளி, துறையூர், திருச்சி).

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...