பத்தாம் வகுப்பு: 18, 19-இல் அறிவியல் செய்முறைத் தேர்வு

பத்தாம் வகுப்பு சிறப்பு துணைத் தேர்வின் அறிவியல் செய்முறைத் தேர்வு ஜுன் 18,19 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது.
 இதுகுறித்து அரசுத் தேர்வுகள் இயக்ககம் வெளியிட்ட செய்தி:
 கடந்த மார்ச் 2015-இல் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வெழுதி, அறிவியல் பாட செய்முறைத் தேர்வில் தேர்ச்சி பெறாதவர்கள், அறிவியல் பாட பயிற்சி வகுப்புக்கு வருகை புரிந்து ஆனால் செய்முறைத் தேர்வில் கலந்துகொள்ளத்
தவறிய பள்ளி மாணவர்கள், தனித்தேர்வர்கள் ஆகியோருக்கு வரும் ஜூன் 18,19-ஆம் தேதிகளில் சிறப்புத் துணைத் தேர்வின் அறிவியல் பாட செய்முறைத் தேர்வு நடைபெறும்.
 இதுகுறித்த முழு விவரங்களையும் சம்பந்தப்பட்ட மாவட்டக் கல்வி அலுவலரை நேரில் அணுகி பெற்றுக்கொள்ள மாணவர்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள். 

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...