உலக யோகா தினமான ஜூன் 21ம் தேதி டில்லியில் கின்னஸ் சாதனை

உலக யோகா தினமான ஜூன் 21ம் தேதி டில்லியில் கின்னஸ் சாதனை நிகழ்த்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. அதுவும் ஒன்றல்ல. இரண்டு கின்னஸ் சாதனைகள் நடத்தப்பட உள்ளதாம்.
கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ஐ.நா., சபையில் பேசிய பிரதமர் மோடி, யோகா தினத்தை கொண்டாட இந்தியா முடிவு செய்திருப்பதாக கூறினார். இதற்கு 177 உலக நாடுகள் ஆதரவு அளித்ததை அடுத்து ஜூன் 21ம்
தேதியை உலக யோகா தினமாக ஐ.நா.,வும் அறிவித்தது. இதனால் ஜூன் 21ம் தேதியன்று 192 நாடுகள் உலக யோகா தினத்தை கொண்டாட உள்ளன.

இந்தியாவில் பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள், பாதுகாப்பு அதிகாரிகள், ராணுவ வீரர்கள், மாணவர்கள், சினிமா மற்றும் விளையாட்டுத்துறை பிரபலங்கள் என 45,000 கலந்து கொள்ளும் பிரம்மாண்ட யோகா நிகழ்ச்சி நடத்தப்பட உள்ளது.

ரூ.30 கோடி நிதி ஒதுக்கி உலக யோகா தினத்தை கொண்டாட ஏற்பாடு செய்து வரும் மத்திய அரசு, அன்று 2 கின்னஸ் சாதனைகளை நிகழ்த்துவதற்காக கின்னஸ் கழகத்திடம் விண்ணப்பத்துள்ளது. மிகப் பெரிய யோகா வகுப்பு என்ற சாதனையும், பல்வேறு நாடுகளைச் சேர்ந்த அதிக அளவிலான மக்கள் கலந்து கொள்ளும் நிகழ்ச்சி என்ற சாதனையையும் நிகழ்த்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

இந்தியாவை பொறுத்த வரை, இதற்கு முன் 2005ம் ஆண்டு கன்னியாகுமரியைச் சேர்ந்த விவேகானந்தா கேந்திரா சார்பில் 29,97பேர் கலந்து கொண்டதே மிகப் பெரிய யோகா வகுப்பாக கருதப்படுகிறது. இதில் 362 பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள் கலந்து கொண்டனர்.



ஜூன் 21ம் தேதி டில்லி ராஜ்பாத்தில் நடக்க உள்ள பிரம்மாண்ட யோகா நிகழ்ச்சியில் சுமார் 100 நாடுகளைச் சேர்ந்தவர்கள் கலந்து கொண்டு, ஒரே நேரத்தில் யோகா செய்ய உள்ளனராம். இதுவரை 45 நாடுகளைச் சேர்ந்தவர்கள் கலந்து கொள்வது உறுதி ஆகிவிட்டதாம். கின்னஸ் சாதனைக்காக மத்திய அரசு விண்ணப்பித்துள்ளதை கின்னஸ் நிறுவனமும் உறுதி செய்துள்ளது. இந்த பிரம்மாண்ட நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளையும், பாதுகாப்பு ஏற்பாடுகளையும் மத்திய அரசு தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...