அகில இந்திய மருத்துவப் படிப்புக்கான நுழைவுத்தேர்வு ஜூலை 25-ம் தேதி மீண்டும் மறுதேர்வு நடத்தப்படும் என்று சிபிஎஸ்இ அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
ஏற்கெனவே நடைபெற்ற நுழைவுத்தேர்வை உச்ச நீதிமன்றம் ரத்து செய்ததையடுத்து மீண்டும் நுழைவுத்தேர்வு நடத்த சிபிஎஸ்இ தீர்மாணித்துள்ளது.
மறு நுழைவுத்தேர்வுக்கு புதிதாக யாரும் விண்ணப்பிக்க முடியாது என சிபிஎஸ்இ அறிவித்துள்ளது. கடந்த மே 3-ம் தேதி நடந்த தேர்வில் முறைகேடு நடைபெற்றதாக நுழைவுத்தேர்வு ரத்து செய்யப்பட்டிருந்தது. எனவே ஜூலை 25-ல் மீண்டும் தேர்வு நடத்த சிபிஎஸ்இ முடிவு செய்துள்ளது.
விண்ணப்பிதோருக்கு மின்னஞ்சல் மற்றும் குறுஞ்செய்தி மூலமாக தகவல்கள் அனுப்பப்படும்.
www.aipmt.nic.in என்ற இணையதளத்தில் கூடுதல் தகவல்கள் வெளியிடப்படும் என்று சிபிஎஸ்இ அறிவித்துள்ளது.