ஆய்வக நுட்பனர் நிலை 2 காலி பணியிடத்திற்கு சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த தகுதியான நபர்கள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர்.
இதில், பதிவு மூப்பு பட்டியலை ஜூன் 29 இல் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நேரில் வந்து சரி பார்த்து கொள்ளலாம் என மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் சங்கரசுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
அவரது செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது: சென்னை மருத்துவ பணியாளர் தேர்வாணையத்தால் அறிவிக்கப்பட்டுள்ள 498 ஆய்வக நுட்பனர் நிலை-2 காலிப்பணியிடத் திற்கு மாநில அளவிலான பதிவு மூப்புபரிந்துரைக்கப்பட உள்ளது.
இதற்கு, கல்வித்தகுதி:பள்ளி மேல்நிலை தேர்ச்சியுடன், கிங் இன்ஸ்டியூட் அல்லது தமிழக அரசால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தில் ஆய்வக நுட்பனர் 2 ஆண்டு பட்டயச்சான்று பெற்றிருக்க வேண்டும். வயது:01.07.2015 இல் பகிரங்கபோட்டியாளருக்கு 30 வயதுக்குள் இருக்கவேண்டும். மற்ற பிரிவினருக்கு வயது வரம்பு கிடையாது.
மேற்கண்ட கல்வித் தகுதி வயது வரம்புக்கு உட்பட்டு உத்தேச பதிவு மூப்பு பட்டியல் மற்றும் பரிந்துரைக்கப்பட உள்ளனர். தகுதியானவர்கள் பெயர் விபரத்தினை சிவகங்கை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்துக்கு ஜூன் 29 அன்று நேரில் வந்து உறுதிபடுத்திக் கொள்ளலாம் என குறிப்பிட்டுள்ளார்.