கிரெடிட், டெபிட் கார்டு'களை பயன்படுத்தினால் வரி சலுகை

நாட்டில், ரொக்க பணப் பரிவர்த்தனையை குறைக்கும் வகையில், 'டெபிட், கிரெடிட் கார்டு' கள் மூலம் பணப் பரிவர்த்தனையில் ஈடுபடுபவர்களுக்கு, வரிச் சலுகை வழங்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.


டெபிட், கிரெடிட் கார்டுகள் மூலமான பணப் பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் வகையில், இந்த கார்டுகளை பயன்படுத்தி, பொருட்களை வாங்கும், கட்டணங்களை செலுத்தும் நுகர்வோர் மற்றும் அவற்றை ஏற்கும் வர்த்தகர்களுக்கு வரிச்சலுகை அளிக்க மத்திய அரசு முன்வந்துள்ளது.

அதிகப்படியான அளவில் எலக்ட்ரானிக் பணப் பரிவர்த்தனையை ஏற்கும் வர்த்தகர்களுக்கு வரிச்சலுகை அளிக்கவும் அரசு திட்டமிட்டுள்ளது. இதன்படி, ஒரு லட்சம் ரூபாய்க்கு மேலான அனைத்து வகை பணப் பரிவர்த்தனைகளையும், எலக்ட்ரானிக் முறையில் அமல்படுத்தும் முயற்சி யிலும் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது.



இதுகுறித்து, இம்மாதம் 29ம் தேதிக்குள், பொதுமக்கள் தங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...