அண்ணாமலைப் பல்கலை: சேர்க்கைக்கான விண்ணப்பங்களை சமர்ப்பிக்க நாளை கடைசி

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் மருத்துவம் மற்றும் பல்மருத்துவம் (M.B,B.S., B.D.S), பிஇ (பொறியியல்)., பிஎஸ்சி விவசாயம்., பிஎஸ்சி தோட்டக்கலை (B.sc Agri and B.sc Horticulture) ஆகிய படிப்புகளுக்கான விண்ணப்பங்களை சமர்ப்பிக்க ஜூன் 12-ம் தேதி கடைசி தேதியாகும். மாணவ, மாணவியர்கள் இவ்வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளுமாறு பதிவாளர் ஜெ.வசந்தகுமார் வேண்டுகோள் விடுத்துள்ளார்.


விண்ணப்பங்களை அண்ணாமலைநகரில் உள்ள பல்கலைக்கழக நிர்வாக அலுவலகத்திலும், தமிழ்நாட்டில் உள்ள அனைத்து தொலைதூரக்கல்வி இயக்கக படிப்பு மையங்களிலும் பெறறுக்கொள்ளலாம் மருத்துவம் மற்றும் பல் மருத்துவ படிப்பிற்கு ரூ.1500 செலுத்தியும், பிஸ்சி வேளாண்மை மற்றும் தோட்டக்கலை படிப்பிற்கு ரூ.800 செலுத்தியும், எஸ்சி., எஸ்டி பிரிவினர் ரூ.400 செலுத்தியும் வருகிற மே 14-ம் தேதி முதல் பெற்றுக் கொள்ளலாம்.

பொறியியல் புலத்தில் 10 படிப்புகளுக்கான அனுமதி சேர்க்கை நடைபெறவுள்ளது.  விண்ணப்பங்களை பல்கலைக்கழக நிர்வாக அலுவலகம், அனைத்து படிப்பு மையங்களிலும் ரூ.800 கட்டணம் (எஸ்சி., எஸ்டியினருக்கு ரூ.400) செலுத்தி பெற்றுக்கொள்ளலாம். மேலும் ஆன்லைனில் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி அதற்கான தொகையை வரைவோலையாக இணைத்து விண்ணப்பிக்கலாம். எம்பிபிஎஸ்., பிடிஎஸ்., பிஇ., பிஎஸ்சி வேளாண்மை, பிஎஸ்சி தோட்டக்கலை ஆகிய படிப்புகளுக்கு சேருவதற்கான விண்ணப்ப விற்பனை மற்றும் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் அனுப்ப கடைசி தேதி நாளை ஜூன் 12-ம் தேதியாகும்.

தனி கலந்தாய்வு: இந்த ஆண்டு பிஇ படிப்பிற்கு 2130 மாணவ, மாணவியர்களும்,  எம்பிபிஎஸ் 150 இடங்களும், பிடிஎஸ் 100 இடங்களும், பிஎஸ்சி வேளாண்மை 1000 இடங்களும், பிஎஸ்சி தோட்டக்கலை 70 இடங்களிலும் மாணவர்கள் சேர்க்கை செய்யப்படுவார்கள். அண்ணாமலைப் பல்கலையில் எம்பிபிஎஸ்., பிடிஎஸ்., பிஇ ஆகியவற்றிற்கு தனி, தனி கலந்தாய்வு (கவுன்சிலிங்) மூலம் மாணவர்கள் சேர்க்கை நடைபெறுகிறது. மாணவர்கள் முற்றிலும் தகுதி அடிப்படையிலேயே சேர்க்கைக்கு தேர்வு செய்யப்படுவார்கள்.

ஜூன் இறுதியில் கலந்தாய்வு: தமிழகஅரசு இடஒதுக்கீடு விதிப்பட்டியும், மாணவர்கள் மேல்நிலைப்பள்ளி அல்லது அதற்கு இணையான படிப்பில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையிலும் சேர்க்கைக்கான பட்டியல் தயார் செய்யப்படும். சேர்க்கைக்கு விண்ணப்பித்த மாணவர்கள் அவர்கள் பிளஸ்டூ தேர்வில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் கலந்தாய்விற்கு அழைக்கப்படுவார்கள். கலந்தாய்வு (Counciling) ஜூன் இறுதியில் நடத்தப்படும் எனக்கூறப்படுகிறது. அதற்கான தேதி விபரம் பின்னர் அறிவிக்கப்படும். மேலும் விபரங்களுக்கு பல்கலைக்கழக இணையதளம் www.annamalaiuniversity.ac.in என்ற முகவரியில் பார்க்கவும். மேலும் au_regr@ymail.com என்ற மெயில் முகவரியையும் மற்றும் உதவி மைய தொலைபேசி எண்கள்: 04144 238348, 238349 ஆகியவற்றை தொடர்பு கொண்டு தகவல் தெரிந்து கொள்ளலாம்

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...