ஓய்வூதியம் நிறுத்தம்

சத்துணவு ஊழியர்களுக்கு கடந்த 7 மாதங்களாக ஓய்வூதியம் நிறுத்தப்பட்டுள்ளதற்கு தமிழ்நாடு அரசு அனைத்துத் துறை ஓய்வூதியர் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.இந்தச் சங்கத்தின் மாவட்ட ஆண்டு பேரவைக் கூட்டம் காஞ்சிபுரத்தில் அண்மையில் நடைபெற்றது. மாவட்டத் தலைவர்
சாரங்கன் தலைமை வகித்தார். கூட்டத்தில் வலியுறுத்தப்பட்ட தீர்மானங்கள்:
சத்துணவு ஓய்வூதியர்களுக்கு கடந்த 7 மாதங்களாக ஓய்வூதியம் வழங்கப்படவில்லை.

மேலும், ஓய்வு பெற்றவர்களுக்கு ஒட்டுமொத்தத் தொகை, சிறப்பு சேமநிதி ஆண்டுக்கணக்கில் வழங்கப்படாமல் உள்ளது. அவற்றை உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.ஓய்வூதியர் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத் தொகையை ரூ.4 லட்சமாக உயர்த்த வேண்டும். 2006-க்கு முன் ஓய்வு பெற்றவர்களுக்கு புதிய ஊதிய விகிதத்தில் தர ஊதியத்தையும் இணைத்து குறைந்தபட்ச ஓய்வூதியம் நிர்ணயம் செய்யவேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...