இலவச பாட புத்தகங்கள் பாதி விலைக்கு விற்பனை

தமிழகத்தில் அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவசமாக வழங்கப்பட வேண்டிய சமச்சீர் திட்டபாட நூல்கள் சேலத்தில் உள்ள பழைய புத்தகக்கடைகளில் பகீரங்கமாக விற்கப்படுவது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அரசு பள்ளி மாணவர்களுக்கு அரசின் சார்பில் இலவசமாக பாடப் புத்தகங்கள் வழங்கப்படுகின்றன. தமிழ்நாடு பாடநூல் கழகத்தின்
சார்பில் அச்சிடப்பட்டு தமிழக முழுவதும் விநியோகிக்கப்பட்ட இந்த புத்தங்கள் அனைத்தும் பள்ளி திறக்கும் முன்னே மாணவர்களுக்கு வழங்கப்பட்டு இருக்க வேண்டும்.

ஆனால் சேலம் மாவட்டம் ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள பழைய புத்தகக்கடைகளில் இந்த நூல்கள் பகீரங்கமாக விற்கப்படுகின்றன. விற்பனைக்கு அல்ல என்று முன்பக்க அட்டையில் அச்சிடப்பட்டு இருந்தும் பாதி விலையில் விற்கப்படும் இந்த புத்தகங்களை ஏராளமானோர் வாங்கி செல்கின்றனர். போட்டித் தேர்வுகளுக்கு தயாராவோர் இந்த புத்தகங்களை வாங்கிச் செல்வதாக வியாபாரிகள் கூறுகின்றனர்.

பண்டல்கள் கூட பிரிக்கப்படாமல் விற்பனைக்கு வந்துள்ள இந்த புத்தகங்கள் சென்னையில் உள்ள தமிழ்நாடு பாடநூல் கழகத்திலிருந்து முறைகேடாக கொண்டுவரப்பட்டதா என்று கல்வியாளர் சந்தேகம் அடைந்துள்ளனர். இலவச பாடநூல் விநியோகத்தில் ஏற்பட்ட இந்த முறைகேடுகள் குறித்து அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கல்வியாளர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...