ஐ.ஐ.எம்.,களை கட்டுப்படுத்த மத்திய அரசு திட்டம்

ஐ.ஐ.எம்., எனப்படும் இந்திய மேலாண்மை கல்வி மையங்களில் பயிலும் மாணவர்கள், உலகின் முன்னணி நிறுவனங்களில் உயர் மட்ட நிர்வாகப் பணிகளில் கோலோச்சுகின்றனர். இக்கல்வி மையங்களில் பயில, இந்திய மாணவர்களிடையே கடுமையான போட்டி நிலவுகிறது.


சட்ட வரைவு

ஐ.ஐ.எம்., படிப்புகளுக்கான கட்டண நிர்ணயம், பேராசிரியர்களுக்கான ஊதியம், சேவைகளுக்கான நிபந்தனைகள் போன்ற பல்வேறு கொள்கை விஷயங்களில் முக்கிய முடிவுகளை எடுக்கும் அதிகாரங்களை, மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறைக்கு வழங்கும் வகையில், சட்டம் இயற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. மத்திய அரசு தயாரித்துள்ள சட்ட வரைவு, ஐ.ஐ.எம்.,கள், கொள்கை விஷயங்களில், அரசின் உத்தரவுக்கு கட்டுப்பட்டவை எனக் கூறுகிறது.

இருப்பினும், சட்ட வரைவு குறித்து, இந்தியாவின் பல்வேறு நகரங்களில் உள்ள ஐ.ஐ.எம்.,கள் இடையே, முரண்பட்ட கருத்துக்கள் நிலவுகின்றன. நாட்டின் பழமையான மேலாண்மை கல்வி மையங்களாக திகழும், ஐ.ஐ.எம்., - ஆமதாபாத் உள்ளிட்ட, ஆறு ஐ.ஐ.எம்கள், 'மத்திய அரசின் முயற்சி, ஐ.ஐ.எம்.,களின் சுயாட்சி அதிகாரத்தை பறிப்பதாக உள்ளது. இம்மையங்களை, வெளியில் இருந்தவாறு ஆட்டிப்படைக்க முயற்சி நடக்கிறது' எனக் குற்றம் சாட்டி உள்ளன. ஆனால், ஐ.ஐ.எம்.,-ரோடக் உள்ளிட்ட, புதிதாக நிர்மாணிக்கப்பட்ட எட்டு ஐ.ஐ.எம்,களின் இயக்குனர்கள், அரசின் நடவடிக்கைக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

ஐ.ஐ.எம்.,ரோடக், இயக்குனர் ரமேஷன், அரசின் திட்டத்தால், ஐ.ஐ.எம்.,கள், சுயாட்சி அதிகாரத்தை இழப்பதாக கூறப்படுவதை மறுத்துள்ளார்.

அவர் கூறுகையில், ஐ.ஐ.எம்.,களில், செயல்திறன் குறைந்து வருவதால், ஒழுக்கத்தை நிலைநிறுத்த, அரசின் தலையீடு அவசியம். ஐ.ஐ.எம்., என்பது, பொதுமக்களுக்கான கல்வி மையம். எனவே, இதன் நிர்வாகத்தில், அரசுக்கு பங்கு இருக்க வேண்டும்&' என தெரிவித்தார்.

ஐ.ஐ.டி., எனப்படும் இந்திய தொழில்நுட்ப கல்வி மையங்களில், மத்திய அரசின் தலையீடு இருப்பதாக குற்றம் சாட்டி, சமீபத்தில், ஐ.ஐ.டி., - டில்லியின் இயக்குனர் செவ்காங்கர், கடந்த ஆண்டு டிசம்பர் மாதம், தன் பதவியை ராஜினாமா செய்தார். இது தொடர்பான சர்ச்சை ஓயும் முன், ஐ.ஐ.எம்.,களிலும், அதிகாரம் செலுத்த, மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...