புத்தகம் திரும்ப பெறப்பட்டது !

தி.மு.க., தலைவரும், முன்னாள் முதல்வருமான கருணாநிதியின் பெயர் இடம்பெற்ற, பிளஸ் ௧ பொருளியல் பாடப் புத்தகங்கள், தமிழ்நாடு பாடநுால் கழக இணையதளத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளன. மாணவர்களுக்கு
வினியோகிக்கப்பட்ட புத்தகங்களும் திரும்பப் பெறப்பட்டுள்ளன.
இப்பாடப் புத்தகத்தின் முகவுரையில், கருணாநிதி மற்றும் முன்னாள் பள்ளிக்கல்வி அமைச்சர் தங்கம் தென்னரசுவின் பெயர்கள் இடம் பெற்றுள்ளன. இதை சமீபத்தில், பள்ளிக்கல்வி அமைச்சக அதிகாரிகள் கண்டுபிடித்து, பாடநுால் கழக அதிகாரிகளிடம் விசாரணை நடத்தியுள்ளனர். 'பாடத்திட்டம் மாறாததால், புத்தகமும் மாறவில்லை' என, அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர்.

இந்நிலையில், சர்ச்சைக்குரிய இந்த புத்தகங்களை, மாணவர்களிடமிருந்து திரும்பப் பெற உத்தரவிடப்பட்டுள்ளது. அனைத்துப் பள்ளிகளிலும் மாணவர்களிடம் இருந்து, பொருளியல் புத்தகங்கள் திரும்பப் பெறப்பட்டுள்ளன. அதற்கு பதில், முகவுரை இல்லாத புத்தகங்கள் வினியோகம் துவங்கியுள்ளது. தமிழக அரசின் பாடநுால் கழக அதிகாரப்பூர்வ இணையதளத்திலும், பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2, பொருளியல் புத்தகங்கள் மட்டும் நீக்கப்பட்டுள்ளன. 'புதிய திருத்தப்பட்ட புத்தகங்கள், விரைவில் பதிவேற்றம் செய்யப்படும்' என, அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...