ஐகோர்ட் மறுப்பு; எல்.எல்.பி., சேர்க்கைகு தடை!

சென்னை, அம்பேத்கர் சட்ட பல்கலைக்கு உட்பட்ட சட்ட கல்லுாரிகளில், மூன்று ஆண்டு எல்.எல்.பி., படிப்பு சேர்க்கைக்கு விதித்த தடையை நீக்க, உயர் நீதிமன்ற மதுரை கிளை மறுத்துவிட்டது.

ஒருநபர் குழு சிபாரிசு


மதுரை வழக்கறிஞர் அசோக் தாக்கல் செய்த மனுவில், சட்ட கல்லுாரிகளில், மாணவர் சேர்க்கைக்கான சட்ட கல்வி விதிகளை, 2008ல், &'இந்திய பார் கவுன்சில் செயலர் கொண்டு வந்தார்.

அவ்விதிகளில் உள்ள வயது வரம்பை நீக்க, இந்திய பார் கவுன்சில் ஒருநபர் குழு சிபாரிசு செய்தது. இதை நிறைவேற்ற, இந்திய பார் கவுன்சில், 2013, செப்., 28ல் அறிவிப்பு வெளியிட்டது; இதை ரத்து செய்ய வேண்டும் என, குறிப்பிட்டார்.

இம்மனுவை, கடந்த, 18ம் தேதி விசாரித்த நீதிபதிகள், வயது வரம்பை நீக்கி, பார் கவுன்சில், 2013ல் பிறப்பித்த உத்தரவிற்கு தடை விதிக்கப்படுகிறது.

அம்பேத்கர் சட்ட பல்கலைக்கு உட்பட்ட சட்டக் கல்லுாரிகளில், மூன்று ஆண்டு எல்.எல்.பி., படிப்பு, சென்னை சிறப்பு சட்டப் பள்ளியில், மூன்று ஆண்டு எல்.எல்.பி.,(ஹானர்ஸ்) படிப்பு மாணவர் சேர்க்கைக்கு தடை விதிக்கப்படுகிறது என்றனர்.

இவ்வழக்கை, நீதிபதிகள் எஸ்.மணிக்குமார், வி.எம்.வேலுமணி கொண்ட அமர்வு, நேற்று விசாரித்தது. அப்போது, சட்டத்துறை துணைச் செயலர் ஜார்ஜ் அலெக்சாண்டர் தாக்கல் செய்த பதில் மனு:

வயது வரம்பு இல்லை

மருத்துவம், பொறியியல் தொழில் படிப்புகளுக்கு உயர்ந்தபட்ச வயது வரம்பு இல்லை. இதுபோல் இந்திய பார் கவுன்சில் சட்டப் படிப்பிற்கான வயதுவரம்பு விதிகளை நீக்கியது. இதன்ப-டி, அம்பேத்கர் சட்டப் பல்கலை மாணவர் சேர்க்கை அறிவிப்பு வெளியிட்டது. வயதுவரம்பு நீக்கத்தை பொறுத்தவரை, இந்திய பார் கவுன்சில் தான் பொறுப்பு. உயர் நீதிமன்ற தடையால், மாணவர் சேர்க்கை பாதிக்கப்பட்டுள்ளது; தடையை நீக்க வேண்டும். இவ்வாறு பதில் மனுவில் தெரிவித்திருந்தார்.

தமிழகம், புதுச்சேரி பார் கவுன்சில் செயலர் தட்சிணாமூர்த்தி, சட்டப்படிப்பை பொறுத்தவரை, இந்திய பார் கவுன்சிலுக்கு தான் முழு அதிகாரம் உண்டு. மாநில பார் கவுன்சிலுக்கு, எவ்வித பங்கும் இல்லை.

தவறு செய்யும் வழக்கறிஞர்கள் மீது நடவடிக்கை எடுக்க, பார் கவுன்சில் விதிகளில் இடம் உண்டு என பதில் மனு தாக்கல் செய்தார். இதையடுத்து, தடையை நீக்க மறுத்த நீதிபதிகள், இந்திய பார் கவுன்சில் செயலர், வரும், ஜூலை, 2ம் தேதி பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டனர்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...