சிறுபான்மையின மாணவ, மாணவியர் கல்வி உதவித்தொகை பெற, ஜூலை 15ம் தேதிக்குள், விண்ணப்பம் செய்ய வேண்டும் என, ஆட்சியர் தெரிவித்து உள்ளார்.
இதுதொடர்பாக, ஆட்சியர் சண்முகம் வெளியிட்ட செய்திகுறிப்பு
அரசு, உதவி பெறும் மற்றும் அரசால் அங்கீகரிக்கப்பட்ட பள்ளிகளில் பயிலும் 1ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரையிலான, சிறுபான்மையின மாணவர்களுக்கு ஆண்டுதோறும் உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது.
அதன்படி, கிறிஸ்துவ, இஸ்லாமிய, புத்த, சீக்கிய, பார்சி மற்றும் ஜெயின் வகுப்பைச் சேர்ந்த மாணவ, மாணவியருக்கு, பள்ளிப்படிப்பு கல்வி உதவித்தொகை திட்டத்தின் கீழ், நடப்பாண்டிற்கான கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இந்த உதவித்தொகை பெற, பெற்றோர் அல்லது பாதுகாவலரின் ஆண்டு வருமானம், 1 லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும்.
மாணவ, மாணவியர் முந்தைய ஆண்டு இறுதி தேர்வில், 50 சதவீத மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும். பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை, ஆதிதிராவிடர் நலத்துறை, இதர துறைகள் மற்றும் நல வாரியங்கள் மூலம், 2015 - 16ம் ஆண்டில் கல்வி உதவித்தொகை பெறக் கூடாது.
1ம் வகுப்பு முதல், 8ம் வகுப்பு வரை மாணவர்கள், புதிதாக விண்ணப்பிக்க மற்றும் புதுப்பித்தல் விண்ணப்பங்களை, www.bcmbcmw.tn.gov.in என்ற இணையதள முகவரியில் இருந்து, பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து, ஜூலை மாதம், 15ம் தேதிக்குள், தங்களது பள்ளியில் சமர்ப்பிக்க வேண்டும்.
9ம் வகுப்பு மற்றும் 10ம் வகுப்பு மாணவர்கள், www.scholarships.gov.in என்ற இணையதள முகவரியில், ஆன்-லைனில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.
அப்போது, இணைக்க வேண்டிய ஆவணங்களை ஸ்கேன் செய்து உள்ளீடு செய்ய வேண்டும். ஆன்-லைனில் விண்ணப்பித்த பின், அந்த விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, ஜூலை 31ம் தேதிக்குள், தங்களது பள்ளிகளில் சமர்ப்பிக்க வேண்டும்.