நீரிழிவு நோயை கட்டுப்படுத்த "ஸ்மார்ட் பேட்ச் இன்சுலின்' எனப்படும் புதிய இன்சுலின் செலுத்தும் உபகரணத்தை அமெரிக்காவின் வடக்கு கரோலினா பல்கலை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
"ஸ்மார்ட் பேட்ச் இன்சுலின்-ல் நூற்றுக்கும் மேற்பட்ட கண் இமை போன்ற நுண்ணிய ஊசிகள் பொருத்தப்பட்டு இருக்கும். இவை உடம்பில் வைத்து அழுத்தப்படும் போது, அவற்றில் இருக்கும் என்ஜைம்கள் உதவியால் ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவுக்கு ஏற்ப தேவையான இன்சுலின் உடம்பில் செலுத்தப்பட்டுவிடும்.
தற்போது ஸ்மார்ட் பேட்ச் இன்சுலின், எலிகளிடம் பரிசோதிக்கப்பட்ட போது, அவற்றின் ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு 30 நிமிடங்களில் கட்டுப்பாட்டுக்கு வந்ததாக விஞ்ஞானிகள் தெரிவிக்கிறார்கள்.
உலகம் முழுவதும் சுமார் 38 கோடி பேர் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக ஒரு புள்ளி விவரம் தெரிவிக்கிறது. பாதிக்கப்பட்டவர்கள் ஆரம்ப நிலையில் மாத்திரைகளை உட் கொண்டு ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்துகிறார்கள். ஆனால் ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்த முடியாத பட்சத்தில் இன்சுலின் மருந்தை உடம்பில் ஊசி மூலம் செலுத்த வேண்டியதாகிறது. அவ்வாறு இன்சுலின் செலுத்தப்படும் போது சிறிது வலியும் ஏற்படும். புதிய கண்டுபிடிப்பான "ஸ்மார்ட் பேட்ச் இன்சுலின்' வலியை ஏற்படுத்தாது என்று தெரிகிறது.
இனி வரும் காலங்களில் நீரிழிவு நோயாளிகளுக்கு "ஸ்மார்ட் பேட்ச் இன்சுலின்' ஒரு வரப்பிரசாதமாக அமையும் என்று மருத்துவ விஞ்ஞானிகள் கூறுகிறார்கள்.