மருத்துவப் படிப்பில் இலங்கை அகதிகளின் வாரிசுகளுக்கு இடம் ஒதுக்குவது குறித்து மத்திய அரசின் விருப்பத்தை தெரிவிக்கும்படி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.
ஈரோடு மாவட்டம், அரச்சலூர் முகாமில் இலங்கை அகதிகள் வசிக்கின்றனர். இங்கு வசிக்கும் பெற்றோரின் வாரிசு நந்தினி;
பிளஸ் 2 படிப்பில் 1,170 மதிப்பெண் பெற்றார்; எம்.பி.பி.எஸ்., படிப்புக்கு விண்ணப்பித்தார்.கவுன்சிலிங்: இலங்கை அகதி என்பதால் எம்.பி.பி.எஸ்., படிப்புக்கு தேர்ந்தெடுக்கப்படவில்லை.
இதுகுறித்து, பத்திரிகையில் செய்தி வெளியானது.இதையடுத்து நந்தினிக்கு மருத்துவப் படிப்பில் இடம் ஒதுக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில்வழக்கறிஞர் ஸ்ரீபிரியா என்பவர் மனு தாக்கல் செய்தார்.இம்மனு தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல் அடங்கிய ’முதல் பெஞ்ச்’ முன், விசாரணையில் உள்ளது.
நேற்று இம்மனு விசாரணைக்கு வந்த போது ’முதல் பெஞ்ச்’ பிறப்பித்த உத்தரவு:
மத்திய உள்துறை மற்றும் சுகாதார அமைச்சகத்தின் கடிதத்தை கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் தாக்கல் செய்துள்ளார். அதில், இலங்கை உட்பட நட்பு நாடுகளுக்காக மருத்துவப் படிப்பில் சில இடங்கள் ஒதுக்கப்படுவதாகக் குறிப்பிட்டாலும் அகதிகளின் குழந்தைகளுக்கு உரிமை இல்லை என கூறப்பட்டுள்ளது. அகதிகளின் குழந்தைகளுக்கு அத்தகைய வசதிகளை கோரி இம்மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. எனவே அத்தகைய வசதிகளை வழங்க அரசு விரும்புகிறதா, இல்லையா என்பது தான் பிரச்னை.
இலங்கை அகதிகளுக்காக இத்தகைய வசதியை அளிக்க மத்திய அரசு விரும்புகிறதா என்பது குறித்து தெளிவான விளக்கம் பெற ஒரு வார கால அவகாசத்தை கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் கோரி உள்ளார்.இந்த வழக்கானது இந்தியாவில் பிறந்து, வளர்ந்த இலங்கை அகதி சம்பந்தப்பட்டது என்பதை மனதில் கொள்ளவேண்டும். விசாரணை வரும் 26ம் தேதிக்கு தள்ளி வைக்கப்படுகிறது. இவ்வாறு, ’முதல் பெஞ்ச்’ உத்தரவிட்டுள்ளது.