கடந்த ஆண்டுகளில் பிளஸ் 2 முடித்த மாணவர்களைச் சேர்க்க எதிர்ப்புத் தெரிவித்து இந்த ஆண்டு பிளஸ் 2 முடித்த மாணவர்கள் தொடர்ந்த வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தள்ளுபடி செய்தது. இதன்மூலம் எம்.பி.பி.எஸ். படிப்பில் சேர பழைய மாணவர்களுக்கும் அனுமதி
கிடைத்துள்ளது.
சென்னை, நந்தனத்தைச் சேர்ந்த டாக்டர் நல்லி ஆர்.கோபிநாத் உள்பட 60-க்கும் மேற்பட்டோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுக்களைத் தாக்கல் செய்தனர்.
"பழைய மாணவர்களை இந்த ஆண்டு அனுமதித்தால், அவர்களே அதிக பலனடைவர். கடந்த ஆண்டு இடம் கிடைக்காத மாணவர்கள் வேறு படிப்பில் சேர்ந்து, அதை நிறுத்திவிட்டு மருத்துவக் கலந்தாய்வில் சேரலாம். இதனால், ஒருவர் மட்டுமே பாதிக்கப்பட மாட்டார். அனைவரும் பாதிக்கப்படுவார்கள்.
இந்த ஆண்டு பிளஸ் 2 தேர்வு எழுதிய மாணவர்களை மட்டுமே எம்.பி.பி.எஸ். கலந்தாய்வில் பங்கேற்க அனுமதிக்கும் வகையில் தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும்' என்று மனுக்களில் கோரப்பட்டது.
இரு நீதிபதிகள் அமர்வு: இந்த மனுக்கள் மீதான விசாரணை, நீதிபதிகள் சதீஷ் கே.அக்னிஹோத்ரி, எம்.வேணுகோபால் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நடைபெற்றது.
விசாரணையின்போது மனுதாரர்கள் தரப்பில் மூத்த வழக்குரைஞர்கள ஆர்.காந்தி, ஏ.ஆர்.எல்.சுந்தரேஷ், வழக்குரைஞர்கள் ராகவாச்சாரி, ஐசக் இமானுவேல் உள்பட பலர் ஆஜராகி, பழைய மாணவர்களை எம்.பி.பி.எஸ். படிப்பில் சேர்ப்பதால் இந்த ஆண்டு பிளஸ் 2 மாணவர்களுக்கு ஏற்படும் பாதிப்பை விளக்கினர்.
அரசுத் தரப்பு வாதம்: அரசுத் தரப்பில் அரசு தலைமை வழக்குரைஞர் ஏ.எல்.சோமையாஜி, அரசு கூடுதல் வழக்குரைஞர் டி.கிருஷ்ணகுமார் ஆகியோர் ஆஜராகினர்.
"எம்.பி.பி.எஸ். படிப்பில் சேருவதற்கு பிளஸ் 2 தேர்வில் தகுதியான மதிப்பெண்கள் இருந்தால் போதும் என சட்ட விதிகளில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் 50 சதவீத எம்.பி.பி.எஸ். இடங்கள் பழைய பிளஸ் 2 மாணவர்களுக்கு ஒதுக்கப்பட்டு விடும் என்ற மனுதாரர்களின் வாதத்தில் உண்மை இல்லை. இந்த ஆண்டு பிளஸ் 2 முடித்த மாணவர்கள்தான் எம்.பி.பி.எஸ். படிப்புக்கு விண்ணப்பிக்க வேண்டும் என விண்ணப்பத் தகவல் கையேட்டில் குறிப்பிடவில்லை. இதனால் கடந்த ஆண்டுகளில் பிளஸ் 2 முடித்த மாணவர்களை எம்.பி.பி.எஸ். படிப்பில் சேர்ப்பதில் தவறில்லை' என்று அரசுத் தரப்பு வழக்குரைஞர்கள் வாதாடினர்.
நீதிபதிகள் உத்தரவு: இரு தரப்பு வாதங்களையும் கேட்ட பிறகு நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:
தமிழக அரசுப் பாடத் திட்டத்தின் கீழ் தேர்வு எழுதிய மாணவர்கள் மருத்துவப் படிப்புக்குத் தகுதியானவர்கள். அவர்கள் எந்தக் கல்வியாண்டைச் சேர்ந்தவர்கள் என்பது தேவையில்லை. தமிழ்நாடு தொழில்கல்விச் சேர்க்கைச் சட்டப் பிரிவு 2 (ஜி)-இன்படி, பிளஸ் 2 தேர்வில் தகுதியான மதிப்பெண் பெற்ற அனைத்து மாணவர்களும் நிகழ் கல்வியாண்டில் 2015-16இல் எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ். படிப்புகளில் விண்ணப்பிக்கத் தகுதியானவர்களே.
மேலும் வேறு தொழில் படிப்புகளில் (பி.இ. படிப்பு உள்ளிட்டவை) சேர்ந்தவர்கள், படிப்பை பாதியில் நிறுத்தியவர்களை எம்.பி.பி.எஸ். படிப்பில் சேர்ப்பதற்குத் தடை விதிக்க முடியாது. எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ். படிப்பில் ஏற்கெனவே சேர்ந்தவர்கள், மீண்டும் எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ். படிப்பில் சேருவதற்கு மட்டுமே தடை விதிக்கப்பட்டுள்ளது. அதைத் தவிர வேறு எதற்கும் தடையை நீட்டிக்க முடியாது.
எனவே கடந்த ஆண்டுகளில் பிளஸ் 2 முடித்த மாணவர்களை எம்.பி.பி.எஸ். படிப்பில் சேர்ப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் தள்ளுபடி செய்யப்படுகின்றன'' என நீதிபதிகள் தெரிவித்தனர்.