அரசுப்பள்ளிகளில் சேர்க்கை அதிகரிப்பு : தனியார் பள்ளியில் படித்த மாணவர்கள் படையெடுப்பு

பொதுத்தேர்வு முடிவுகளில், அரசு பள்ளி மாணவ, மாணவியர் அதிக மதிப்பெண் பெற்றதால், நாமக்கல் மாவட்டம் முழுவதும், 3,000க்கும் மேற்பட்ட தனியார் பள்ளி மாணவ, மாணவியர், அரசு
பள்ளியில் சேர்ந்துள்ளனர்.ஆண்டு தோறும், எஸ்.எஸ்.எல்.ஸி., ப்ளஸ் 2 அரசு பொதுத்தேர்வு முடிவுகளில், தேர்ச்சி மட்டுமின்றி அதிக மதிப்பெண் பெறுவதில், தனியார் பள்ளிகளின் ஆதிக்கம் அதிகரித்து வருகிறது. மேலும், அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையும், பல பள்ளிகளில் வலுக்கட்டாயமாக ஒதுக்கீட்டு இடங்களை நிரப்பும் நிலை ஏற்படும்.தனியார் பள்ளிகளில் இடம் கிடைக்காத மாணவர்களை மட்டுமே, இப்பள்ளிகளில் சேர்க்க வேண்டிய நிர்ப்பந்தமும் நீடித்து வந்தது. இந்த ஆண்டு, நாமக்கல் மாவட்டத்தில், பெரும்பாலான அரசு பள்ளிகளில், வழக்கத்தைவிட மாணவ, மாணவியர் அதிக மதிப்பெண் பெற்றுள்ளனர்.

அதேபோல், கடந்த, இரண்டு ஆண்டுகளாக அரசு பள்ளி மாணவர்களுக்கு, அரசின் விலையில்லா சைக்கிள், லேப்டாப் உள்ளிட்ட பல்வேறு சலுகைகள் வழங்கப்பட்டு வருகிறது. இது பெற்றோர்களை அரசு பள்ளியை திரும்பி பார்க்க வைத்துள்ளது. அதன் காரணமாக, நடப்பு கல்வி ஆண்டில், (2015-16) அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரித்து வருகிறது. குறிப்பாக, நாமக்கல் தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, மகளிர் மேல்நிலைப்பள்ளி, கோட்டை நகராட்சி உயர்நிலைப்பள்ளி உள்ளிட்ட அரசு பள்ளிகளில், மாணவர் சேர்க்கைக்காக வருவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. உயர்நிலை, மேல்நிலை மட்டுமின்றி, துவக்கப்பள்ளிகளிலும், ஆங்கில வழிகல்வி காரணமாக, மாணவர் சேர்க்கை களை கட்டியுள்ளது.நாமக்கல் தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் அல்லிமுத்து கூறும்போது, ""கடந்த, சில ஆண்டுகளில் இருந்ததை காட்டிலும், இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை அதிகரித்துள்ளது. அதற்கு காரணம், அரசு பள்ளிகளின் தேர்ச்சி சதவீதம், மாணவர்களை கட்டுப்பாட்டுடன் நிர்வாகம் செய்யப்பட்டதே,'' என்றார்.

மாவட்ட கல்வித்துறை அதிகாரிகள் கூறியதாவது:

பொதுத்தேர்வுகளில், கடந்த, மூன்று ஆண்டுகளாக, பல அரசுப்பள்ளிகள், 95 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது. அதன் காரணமாக, அரசுப்பள்ளிகள் மீது பெற்றோர்களுக்கு நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. தனியார் பள்ளிகளுக்கு இணையாக, பல அரசுப்பள்ளிகளில் மாணவர் சேர்க்கை நடந்து வருகிறது. குறிப்பாக, ஆர்.புதுப்பாளையம், 500, நாமக்கல் தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, 100, மகளிர் பள்ளி, 100, கோட்டை உயர்நிலைப்பள்ளி, 120 என, மாவட்டம் முழுவதும் தனியார் பள்ளிகளில் இருந்து, அரசு பள்ளியில் சேர்ந்துள்ள மாணவர்களின் எண்ணிக்கை, 3,000த்தை தாண்டி உள்ளது.அதுவும், நாமக்கல் மாவட்டத்தை தவிர, திருச்சி, பெரம்பலூர், சிதம்பரம், தர்மபுரி, ஈரோடு, சேலம் போன்ற பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த தனியார் பள்ளி மாணவர்களும், அரசு பள்ளியில் சேர்ந்துள்ளனர். ஒரு சில அரசுப்பள்ளிகளில், ப்ளஸ் 1 மாணவர் சேர்க்கை முடிந்துவிட்டது. இவ்வாறு, அவர்கள் தெரிவித்தனர்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...