மகாராஷ்ட்டிர தகவல் அறியும் துறைக்கு கமிஷனராக இருப்பவர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். இவரது வீட்டில் இருந்து கிலோ கணக்கில் தங்கம் மற்றும் வெள்ளி குவியலை போலீசார் எடுத்துள்ளனர்.
மகாராஷ்ட்டிர தகவல் கமிஷனர் தீபக் தேஷ்பாண்டே. இவர் வருமானத்திற்கு அதிகமான சொத்து சேர்த்ததாக புகார் எழுந்தது. இதனை அறிந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் பாண்டேயின் மும்பை மற்றும் அவுரங்காபாத் வீட்டில் சோதனை நடத்தினர்.
வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ஒன்றரை கிலோ தங்கம், 27 கிலோ வெள்ளி, பாண்ட் பத்திரங்கள், இரண்டரை கோடி வங்கி டிபாசிட் விவரம் மற்றும் பல்வேறு கம்பெனிகளில் 6 ஆயிரம் பங்குகள் இருப்பது தொடர்பான ஆவணங்கள் சிக்கியது. இது போக மும்பை , தானே , அவுரங்காபாத்தில் ஆகிய நகரங்களில் இவருக்கு ஏக்கர் கணக்கில் நிலம் , கட்டடங்கள் இருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது.
இவரது மொத்த சொத்து மதிப்பை கணக்கிட்டு வருவதாகவும், இதன் பின்னரே முழு சொத்து விவரம் வெளியிடப்படும் என லஞ்ச ஒழிப்பு துணை கமிஷனர் கிஷோர் ஜாதவ் கூறினார்.